26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
539261811
தலைமுடி சிகிச்சை

ஆண்களே, உங்களின் தலை முடி துர்நாற்றம் அடிக்கிறதா..? அப்ப இத படிங்க!

அழகான முடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் இருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏனோ முடியின் மீது ஒரு மோகம் இருக்கத்தான் செய்கிறது. முடி அடர்த்தியாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால், நமது முடியின் அழகையே முடியில் இருந்து வரும் துர்நாற்றம் கெடுத்து விடுகிறது.

உண்மைதாங்க, நமது முடி கருமையாக அடர்த்தியாக இருந்தால் போதாது. முடியில் நாற்றம் வீசினால் நம் அருகில் யார்தான் வருவார்கள். குறிப்பாக ஆண்கள் வெளியில் அதிகம் சுற்றுவதால் முடியை பராமரிப்பதில்லை. இதனால் அதிக துர்நாற்றம் ஏற்படுகிறது. முடியில் வீசும் நாற்றத்தை எளிமையாக போக்க உங்களின் வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும். வாங்க, எப்படினு தெரிந்து கொள்வோம்.

துர்நாற்றம் ஏன் வீசுகிறது..? முடியில் அளவுக்கு அதிகமாக அழுக்கு சேர்ந்தாலோ, பொடுகு அதிகமானாலோ, பேன்கள் இருந்தாலோ தலையில் துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் அதிகமானால் பல வித பிரச்சினைகள் தலைக்கு வர தொடங்கும். குறிப்பாக முடியின் ஆரோக்கியம் கெட்டு விடும். எனவே, துர்நாற்றம் வீசினால் உடனடியாக இந்த பதிவில் கூறும் குறிப்புகளை செய்யுங்கள்.

பூண்டு இருந்தாலே போதும்…! தலையில் ஏற்பட கூடிய துர்நாற்றத்தை எளிமையாக குணப்படுத்த ஒரு அற்புத வழி உள்ளது. இதற்கு வெறும் பூண்டு இருந்தாலே போதும்.

தேவையானவை :- பூண்டு 3 தேங்காய் எண்ணெய் 1/2 கப்

செய்முறை :- முதலில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதில் பூண்டை ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த எண்ணெய்யை சிறிது சூடு காட்டி ஆற வைக்கவும். இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தலையில் அடிக்க கூடிய துர்நாற்றம் விரைவில் போய் விடும்.

ஆலிவ் எண்ணெய் தலையில் அடிக்க கூடிய துர்நாற்றத்தை எளிமையாக போக்க ஆலிவ் எண்ணெய் உதவும். இதற்கு முதலில் ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்தால் நாற்றம் போகும்.

கலவை எண்ணெய் ஒரு சில எண்ணெய்யை தலைக்கு கலந்து குளித்தால் தலையில் அடிக்க கூடிய துர்நாற்றம் சீக்கிரமாக போய்விடும். இதற்கு இந்த குறிப்பு உதவும்.

தேவையானவை :- வேப்பெண்ணெய் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :- வேப்பெண்ணயை அப்படியே தலைக்கு தேய்க்க கூடாது. மாறாக வேறு சில எண்ணெய்களுடன் கலந்து தடவலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தடவி குளித்தால் நாற்றத்தை எளிதாக போக்கி விடலாம்.

வெங்காயம் நாம் சமையலுக்கு பெரிதும் பயன்படுத்தும் இந்த வெங்காயம் நமது முடியின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் பெரிதும் உதவுகிறது. மேலும், தலையில் உள்ள கிருமிகளை கொன்று நாற்றத்தை போக்குகிறது. குறிப்பாக இதில் உள்ள சல்பர் முடியின் துர்நற்றத்தை போக்க உதவுகிறது.

செய்முறை :- முதலில் 3 வெங்காயத்தை எடுத்து கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். இந்த சாற்றை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது ஷாம்பூ சேர்த்து தலைக்கு குளித்தால் நாற்றம் இல்லாமல் இருக்கும்.

எலுமிச்சை :- தலைக்கு எலுமிச்சை தேய்த்து குளிப்பதால் பல்வேறு நலன்கள் உள்ளது. குறிப்பாக பொடுகு, துர்நாற்றம் போன்றவை குணமாகும். மேலும், முடியின் ஆரோக்கியத்தையும் எலுமிச்சை அதிகரிக்கும். எனவே, எலுமிச்சை சாற்றை தலைக்கு தேய்த்து வந்தால் துர்நாற்றம் விலகி விடும். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

539261811

Related posts

தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்கள் முன் தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்வதற்கான சில வழிகள் இதோ!

nathan

கூந்தல் அழகியாக கறிவேப்பிலை!

nathan

கறிவேப்பிலையுடன், நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை.

nathan

பொடுகு தொல்லையால் ஏற்படும் கூந்தல் பாதிப்புக்கு தீர்வுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையை போக்கும் மூலிகை தைலம்

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் !அழகின் ரகசியம்!!

nathan

எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க

nathan