தேவையானப் பொருட்கள் :
ஆட்டுக்கால் – 4
நறுக்கிய வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனியாத்தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவைாயன அளவு
தாளிக்க :
பட்டை, , கிராம்பு – தலா இரண்டிரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மல்லிஇலை – சிறிதளவு
செய்முறை :
தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.
ஆட்டுக்காலை நல்ல தேய்த்து கழுவி சுத்தம் பண்ணி வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை எடுத்து அதில் தேவைாயன அளவு எண்ணெய் ஊற்றி அதில் முக்கால் பாகம் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் மிளகு தூள் தவிர மற்ற அனைத்து தூள்களையும் போட்டு வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி அதனுடன் ஆட்டுக்கால் சேர்த்து நன்கு வதக்கி தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பு சேர்த்து நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.
விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, தாளித்து பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, சேர்த்து 2 நிம்டம் வதக்கி ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும். சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.
இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.