மாதவிடாய்… பருவமடைந்த பெண்களுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரையிலும்., பருவமடைந்த நாட்களில் இருந்து சுமார் நாற்பது மற்றும் ஐம்பது வயது வரை ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வே மாதவிடாய் எனப்படும். இந்த மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை மாதம்தோறும் ஏற்படும் நிலையில்., இந்த காலகட்டம் அதிகளவு வலியை ஏற்படுத்தும் காலங்கள் ஆகும்.
பொதுவாக பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் கொஞ்சம் அக்கறையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்
ஏனென்றால் இந்த சமயத்தில் பெண்கள் உடலளவிலும்., மனதளவிலும் வலிக்கும் துயருக்கும் மத்தியில் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருவதால்., அவர்களுக்கு உடற்சோர்வு மற்றும் மனசோர்வானது ஏற்படுகிறது.
இந்த சமயத்தில்., அவர்களுக்கு தேவையான உதவிகளை உங்களால் செய்ய இயலவில்லை என்றாலும்., உபத்திரம் இல்லாமல் இருப்பது நல்லது… முகநூலில் கண்ட பதிவு: ஒரு பெண் அவரது பதிவில் குறிப்பிட்டதாவது., நானும் ஒரு பெண் தான்., எனது சகோதரன் நான் பருவமடைந்ததில் இருந்து மாதவிடாய் நேரத்தில் என்னருகே நீ வராதே., உன் மீது எதோ நாற்றம் வீசுகிறது என்று கூறுகிறான்… நான் என்ன செய்வது என்று கூறியிருந்தார்.
உண்மையை கூட வேண்டும் என்றால் உன்னை உனது தாய் பெற்றெடுக்கும் சமயத்தில்., அவரது பிறப்புறுப்பின் வழியாக நீ வரும் போது., உனது உடலில் இரத்த வாடையும்., பிற நாற்றமும் வீசும்., இத்தனைக்கும் மத்தியில் கொடுமையான வலியை தாங்கி உன்னை பெற்றெடுப்பாள்.. நீ வெளிவந்ததும் உன் மீது என்னதான் நாற்றம் அடித்தாலும் அவள் உன் மீது முத்தமிடுவாள்… இதற்கு மேல் விலக்கம் அளிக்க முடியாது.
இந்த சமயத்தில் கணவன் – மனைவிக்கு எவ்வாறு உதவியாக இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். மாதவிடாய் நேரத்தில் பொதுவாக பெண்களுக்கு கோபமானது அதிகளவில் ஏற்படும். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்., அவர்களின் மாதவிடாய் வலி. இந்த நேரத்தில்., மனைவி கோபமாக இருப்பின் அவர்களின் நிலையை அறிந்து அமைதியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் முடிந்தளவு அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து வழங்கலாம்.
இந்த நேரத்தில்., வீட்டு வேலைகள் மற்றும் பிற வேலைகளை சரிவர பெண்கள் செய்யவில்லை என்றால்., அவர்களிடம் தேவையற்று கோபப்பட கூடாது. இந்த சமயத்தில் உடலளவிலும் கடுமையாக அவதியுற்று இருக்கும் பெண்களின் மனதையும் நோகடிக்க வேண்டாம். சில பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் கால்களில் வீக்கமானது ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையை உணர்ந்து மனைவியின் கால்களை பிடித்து விடுவது., பிற இடங்களுக்கு சென்று தேவையான பொருட்கள் கணவர் கடைக்கு சென்று வாங்கி வருவது போன்றவற்றை செய்யலாம். அதிகளவு வலி உள்ளதா? ஏதேனும் உதவி தேவையா? என்று கேட்பதன் மூலமாக இருவருக்கும் இடையே இருக்கும் அன்பானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் சிறிதளவு மன அமைதியானது கிடைக்கும்.
முடிந்தளவு உங்களின் மனைவியாக இருந்தாலும் சரி., உங்களின் தோழியாக இருந்தாலும் சரி… பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் காலத்தை வெளிப்படையாக கூறுவதற்கு சிறிது தயங்கினாலும்., அவர்களின் உடல் மற்றும் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து அவர்களின் நிலைக்கேற்ப செயல்படுவது வலியால் வெளியே கூற இயலாமல் துடிக்கும் அவர்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும்.