கிரீன் டீ குடிப்பது எல்லாருக்கும் இப்போது கௌரவ விஷயமாக நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறோம்.
கீரின் டீ குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும் உடல் ரீதியாக ஒரு சில பிரச்சனை உள்ளவர்கள் இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
மேலும் அந்த வகையில் உடலுக்கு நன்மை தரும் கிரீன் டீயை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.
யாரெல்லாம் கிரீன் டீயை குடிக்கக்கூடாது.
- சில வியாதிகளுக்காக மாத்திரை எடுத்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் கிரீன் டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது எதிர்வினையை உண்டாக்கிவிடும்.
- உடல் எடையை குறைக்க டயட் அல்லது அதற்கான மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தால் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவும்.
- பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் இதை குடிக்க கூடாது. அந்த சமயத்தில் சில பெண்களுக்கு ஒவ்வாமை உண்டாகும்.
- காஃபின் ஒவ்வாமை இருப்பவர்கள் தினமும் இரண்டு முறைக்கும் அதிகமாக குடிக்கும்போது டென்ஷன், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை ஆகியவை உண்டாகும். எனவே அவர்கள் இதை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
- க்ரீன் டீயை அதிகம் பருகினால், அது மூளையில் தூக்கத்தை தூண்டும் இரசாயனங்களைத் தடுத்து, தூக்கத்தைப் பெறவிடாமல் செய்யும். ஆகவே தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
- இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- க்ரீன் டீ அட்ரினலின் என்னும் ஹார்மோனின் சுரப்பை அதிகரித்து, இதய அழுத்தத்தை வேகமாக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு க்ரீன் டீ நல்லதல்ல.