26.5 C
Chennai
Wednesday, Nov 6, 2024
636 1976
ஆரோக்கிய உணவு

அற்புத மருத்துவகுணம் நிறைந்த ஆடாதோடை…! சூப்பர் டிப்ஸ்

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

எந்த வகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல்பட்டால் தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும்.

இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.

நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.636 1976

Related posts

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan

உங்களுக்கு தெரியுமா 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…முட்டையைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் இறாலை சாப்பிடலாமா.?!

nathan

பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு சமையலில் செய்ய வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் !

nathan

சிறந்த மருந்து மாஇஞ்சி தெரியுமா?

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ்

nathan