spiritu2
ஆரோக்கிய உணவு

அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் உகாதி பச்சடி

உகாதி தினத்தன்று செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு தான் உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும். இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக

வாழ்ந்திட, வாழ்க்கையின் அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும்.

இப்போது அந்த உகாதி பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

வேப்பம்பூ – 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 1 கப் (தட்டியது)

தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்

புளி சாறு – 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 3 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி!!!

 

More UGADI News

Related posts

சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்

nathan

ஹோம் மேட் மயோனைஸ்

nathan

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

ஆரோக்கியமான நுரையீரல் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

முடி உதிர்வுக்கு குட்பை… அசத்தல் நெல்லிக்காய்!

nathan

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

nathan