மசாலா அரைத்து விட்டு சாம்பார் செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும். இன்று அரைத்து விட்ட வெங்காய சாம்பார் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
அரைத்து விட்ட வெங்காய சாம்பார்
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 200 கிராம்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் துருவியது – அரை மூடி
கருப்பு எள் – 2 ஸ்பூன்
தக்காளி – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 6
புளி – எலுமிச்சை அளவு
வெந்தயம் – அரை ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
மஞ்சள் பொடி – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
* புளியை கரைத்து கொள்ளவும்.
* துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி, பெருங்காய தூள் சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும். வேக வைத்த பருப்பை மத்தினால் கடைந்து வைக்கவும்.
* பிறகு கடாயில் எள்ளை, எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடித்து தனியே வைக்கவும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பையும் வறுத்துக்கொண்டு, இதை அடுத்து தேங்காய் துருவலை போட்டு நன்கு சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விடவும். அடுத்தபடியாக தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதங்கிய பின்னர் அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டு கிளறவும்.
* அடுத்து அதில், கரைத்த புளியை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து மூடிவிட்டு, மேலும் கொஞ்ச நேரம் கொதித்ததும், அதனோடு கடைந்த பருப்பையும் கலந்து, மீண்டும் ஒரு கொதிக்க விடவும்.
* இறக்கும் போது எள்ளு பொடி தூவி இறக்கினால் நன்கு வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* குழம்பை இறக்கி விட்டு, மீதி எண்ணெயை ஒரு சிறிய கடாயில் விட்டுக் கடுகு, வெந்தயம், 2 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லி இலையை கிள்ளி போட்டு இறக்கவும்.
* சுவையான அரைத்து விட்ட வெங்காய சாம்பார் சாப்பிட தயார்.