30 oats roti
ஆரோக்கிய உணவு

அருமையான ஓட்ஸ் ரொட்டி

உடல் எடையை குறைக்க நினைப்போர் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு வருவார்கள். அப்படி ஓட்ஸை சாப்பிடும் போது, அதனை பாலில் சேர்த்து தான் ஊற வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இங்கு ஓட்ஸைக் கொண்டு எப்படி ரொட்டி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இது செய்வதற்கு மிகவும் ஈஸியான மற்றும் அருமையான காலை உணவாக இருக்கும். இப்போது அந்த ஓட்ஸ் ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Oats Roti Recipe
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
ஓட்ஸ் – 1/2 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை எலுமிச்சை அளவில் உருண்டைகளாக பிடித்து 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும், சப்பாத்திகளை போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் ரொட்டி ரெடி!!!

Related posts

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறதா பீன்ஸ்….?

nathan

ஓட்ஸ் டயட் இட்லி : செய்முறைகளுடன்…!

nathan

உங்களுக்கு தெரியுமா காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ?

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நீரிழிவு நோயாளிகள் தேங்காய் பால் எடுத்துக்கொள்வது ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..?

nathan

ஸ்டார் ஹோட்டல் முதல் தெருமுனை வரை கிடைக்கும் ஃப்ரைடு ரைஸ்… சாப்பிடலாமா… கூடாதா?!

nathan

பிரிட்ஜில் எந்தெந்த உணவு பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?

nathan