சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால் பொது இடங்களில் எல்லாம் பலரும் மிகுந்த தர்ம சங்கட நிலைக்கு உள்ளாகக்கூடும். இந்த அரிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பாகவும், செதில்செதிலாகவும், மிகுந்த எரிச்சலுடனும் இருக்கும்.
இந்த அரிப்பு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக மற்றும் குண்டாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் வருவது தெரிய வந்துள்ளது. இந்த அரிப்புக்கள் ஏற்படுவதற்கான காரணம், இறுக்கமான உடை அணிதல், ஈரப்பசை இல்லாமை, சருமம் உராய்விற்கு உள்ளாதல், பூஞ்சைத் தொற்றுகள், அதிகப்படியான வியர்வை, உடற்பயிற்சி மற்றும் பொடு கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது போன்றவை. இந்த அரிப்பை ஒருசில எளிய வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்யலாம்.
* மௌத் வாஷ்ஷில், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் உள்ளது. இந்த மௌத் வாஷ் மிகவும் சிறப்பான ஓர் நிவாரணி. அதற்கு சிறிது பஞ்சுருண்டையை எடுத்துக் கொண்டு, அதனை மௌத் வாஷ்ஷில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அழிக்கப்பட்டு, அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
* உப்பு நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அத்தகைய உப்பை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, நீரில் கழுவி வர, அரிப்பை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.
* தேங்காய் எண்ணெயை தடவும் முன் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருமுறை சுத்தம் செய்து கொண்டு, பின் அவ்விடத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
* கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், உடலில் ஏற்படும் தாங்க முடியாத அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.
* வெங்காய சாறை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அரிப்பை ஏற்படுத்திய பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதோடு அரிப்பும் நீங்கும்.