athi
ஆரோக்கிய உணவு

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்

‘சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது.

கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

மொத்தத்தில். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் சத்துக்களின் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் தன்மைகள் ஒன்றே.

“கைகுத்தல் முறையில் இடித்து, சலித்து, தண்ணீரில் கழுவி சாதம், பொங்கல் செய்து சாப்பிடலாம். இவற்றுடன் பயறு வகைகளையும் கலந்து சமைத்தால், கூடுதல் சத்துக்களைப் பெறமுடியும். இப்படி பலவிதமாக சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சீண்டுவாரற்றுக் கிடந்த சிறுதானியங்களுக்கு சமீப காலமாக மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. நீரிழிவு, பருமன், சிறுநீரகக் கோளாறுகள், சருமப் பிரச்னை என எல்லாவற்றுக்கும் சிறுதானியங்களை உண்பதன் மூலம் தீர்வு கிடைப்பது நிரூபிக்கப்பட்டும் வருகிறது.

கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
athi

Related posts

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

சூப்பரான கேரட் சாம்பார்

nathan

முருங்கை பூ பால்

nathan

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

வயிற்றுச் சதையை கிடு கிடுனு குறைக்க சூப்பர் டிப்ஸ்………..

nathan

கறிவேப்பிலைப் பொடி

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும் கொண்டைக்கடலை!

nathan

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு

nathan

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

nathan