அடேங்கப்பா! இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்க..! உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா? தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.
இரவு தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் பெறும் நன்மைகள் ஏராளம்.
தினம் தினம் மக்களை பாடாய் படுத்தி எடுக்கும் கொழுப்பு முதல் சாதாரண இருமல் வரை அனைத்து நோய்க்கு எப்படி தேன் பயன்படும் என்று இனி பார்க்கலாம்.
இரத்த அழுத்தம் குறையும்
உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களின் அபாயத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதால், இதை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம்.
இதனால் இதய நோய்களின் தீவிரத்தைத் தவிர்க்கலாம்.
தேனில் உள்ள ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக காட்டப்பட்டுள்ளன.
ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது இப்பிரச்சனையைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.
வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும்
தினமும் இரவு தேனை உட்கொள்வதால், உடல் ஒரு தெர்மோஜெனிக் விளைவை உருவாக்குவதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது.
இது உடல் வெப்பநிலையை சிறிது அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, எவ்வித கஷ்டமுமின்றி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
இருமலை போக்குகிறது
தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே உள்ளது.
ஒரு டம்ளர் வெதுவெப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரவு குடித்து வந்தால், அது தொண்டையில் உள்ள கரகரப்பை குறைப்பதோடு, இருமலை போக்குகிறது.
கூடுதலாக, தேன் மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக் பொருள். இது தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து, தொண்டையில் உள்ள தொற்றுக்களைப் போக்கும்.