அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இந்த வாழைத்தண்டு மோரை தொடர்ந்து குடித்து வரலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அசிடிட்டி பிரச்சனைக்கு வாழைத்தண்டு மோர்
தேவையான பொருட்கள் :
புளிக்காத மோர் – ஒரு டம்ளர்,
நறுக்கிய வாழைத்தண்டு – கால் கப்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – ருசிக்கேற்ப,
பூண்டு – 1 பல்லில் பாதி,
சின்ன வெங்காயம் – 1.
செய்முறை :
* மேலே கூறிய அனைத்து பொருட்களையும் மோருடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
* இது உடலுக்கு மிகவும் நல்லது. வாரம் இருமுறை இதை குடிக்கலாம்.
குறிப்பு:
பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.