25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
10 139442
மருத்துவ குறிப்பு

வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

இன்றைய மனிதர்களின் உடல்கள் அக்காலத்து மனிதர்களை போல் திடமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் சுகாதாரமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்கமற்ற உணவு முறைகளே. அதனால் இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல வியாதிகளுக்கு உள்ளாகின்றனர். அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றான வாய்வு தொல்லை.

இரையக சவ்வை சுற்றியுள்ள உட்புற அக உறை, வெளிப்புற மற்றும் உட்புற காரணிகளால் பாதிக்கப்படும் போது வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகும். அதனால் கட்டுப்பாடில்லாமல், வயிற்றில் அதிக அளவில் அமில சுரப்பு ஏற்படும். இரையக சவ்வால் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம், மனித உடலில் பெரும் தீங்கை ஏற்படுத்தும். அதனால் எந்த வகையான இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் சிறந்த சிகிச்சையை அளித்திட வேண்டும்

இங்கு அப்படி வாய்வு தொல்லையை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.10 139442

வாய்வு பிரச்சனையை குணப்படுத்த வேண்டும் வாய்வு பிரச்சனையை தவிர்க்க கட்டுப்பாடான உணவு பழக்கம், மெதுவாக உணவுகளை மென்று உண்ணுதல், சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுதல் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற எளிய, அதிமுக்கிய பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். விரைவான நிவாரணத்திற்கு, மசாலா பொருட்கள், காபி, திடமான தேநீர், இறைச்சி, கேக், ஆல்கஹால் மற்றும் மருத்துவர் குறிப்பிட்டு கூறும் புளிப்பான உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வாய்வு பிரச்சனைக்கான காரணங்கள் இந்த பிரச்சனை பல காரணிகளால் உருவாகிறது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது உடல் ரீதியான மற்றும் மன ரீதியான அழுத்தம். காயங்கள் அல்லது மன அழுத்தங்கள், இரையக சவ்வை புண்ணாக்கி விடும். சில காரணிகளால், இரையக அக உறை தீவிரமான அழற்சிக்கு உள்ளாகும். அமில உணவுகள், மருந்துகள், புகைப்பிடித்தல் மற்றும் மது குடித்தல் போன்றவைகள் தான் அந்த காரணிகள். வெப்பத்தில் உண்டாகும் எரிச்சல், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் வயிற்றுப் பொருமல் போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. கட்டிகள், சிறுநீரக கற்கள், மலச்சிக்கல், பாக்டீரியல் தொற்றுக்கள், அல்சர் மற்றும் கணைய அழற்சி போன்றவைகளாலும் வயிற்று பிரச்சனைகள் உண்டாகும்.

எலுமிச்சையின் பயன்பாடு ஒரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும். பேக்கிங் சோடா தண்ணீரில் நன்றாக கரையும் வரை அதை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். இதனை பருகினால், இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். முடிந்த வரை இதனை காலையில் செய்து, உடனடி நிவாரணியை பெறுங்கள்.

மூலிகை தேநீர் மூலிகை தேநீர், செரிமான அமைப்பை துரிதப்படுத்தி மேம்படுத்தவும் செய்யும். அதிலும் சீமைச்சாமந்தி, ராஸ்பெர்ரி, நாவல் பழம் மற்றும் புதினாவால் செய்யப்பட்ட தேநீர் குடிப்பது மிகவும் நல்லது.

பூண்டு தினமும் காலையில் எழுந்ததும் 1-2 பல் பூண்டை நெருப்பில் சுட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடு தண்ணீரைப் பருகினால், வாய்வுத் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

Related posts

கண்டிப்பாக வாசியுங்க….வெண்புள்ளியை தவிர்க்க இந்த காயை சாப்பிடுங்க!

nathan

திருமணத்திற்கு தயாரா?அப்ப உடனே இத படிங்க…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் இப்படித்தான் தயாராகிறது…

nathan

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

nathan

பெண்களே கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்..!

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்னையை விரட்ட வேண்டுமா? இதை மட்டும் இனி செய்யுங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

nathan