30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
rasi
ஆரோக்கியம் குறிப்புகள்

யாருக்கு சுக்கிரனால் பாதிப்பு அதிகம்?யுதி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்?

சுக்கிரனும், சூரியனும் ஒரே ராசியில் இணைந்து இருப்பது என்பது அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் அன்பு, அழகு மற்றும் கலைத்திறன் ஆகியவற்றை அருள்பவர் என்றால், சூரியன் ஆன்மா, தந்தை மற்றும் பல முக்கியமன விஷயங்களுக்கு காரணகர்த்தா. எனவே, இரண்டு கிரகங்களும் இணையும்போது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு தாக்கங்கள்ஏற்படுகின்றன. சிம்ம ராசியில் இருக்கும் சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைப்பு பொதுவாக சில தாக்கங்களை ஏற்படுத்தும். சூரியன் – சுக்கிரன் இணைவதால் பரஸ்பர புரிதல் குறைபாடு ஏற்படலாம். இது தவிர, வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சூரியன்-சுக்கிரன் சேர்க்கை வாழ்க்கையில் சவால்களை எவ்வாறு வெல்வது என்பதை கற்றுக் கொடுக்கும் என்பதோடு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உறவை வலுப்படுத்த ஈகோவை விலக்கி வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைக்கும்.

மேலும் படிக்க | அனந்த சதுர்தசி விரதத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மற்றும் பலன்கள்

கன்னி ராசியில் சூரியன்-சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை ஏற்படுவது 12 ராசியினருக்கும் விதவிதமான பலன்களைக் கொடுக்கும். செப்டம்பர் மாதத்தில் பல கிரகங்கள் கன்னி ராசியில் மாறுகின்றன. புதன் கிரகம் கன்னியில் வக்ர கதியில் நகர்கிறது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவு கன்னி ராசியில் உருவாக உள்ளது. கன்னி ராசியில் புதன், சூரியன், சுக்கிரன் இணைவதால் சிலருக்கு நன்மையும் சிலருக்கு நஷ்டமும் ஏற்படும்.

செப்டம்பர் மாதம் கன்னி ராசியில் ஏற்படும் மாற்றங்கள்
செப்டம்பர் 10ஆம் நாளன்று, புதன் கன்னியில் வக்ர கதியில் மாறியுள்ளார்.புதன் தனது சொந்த ராசியில் வக்ர கதியில் செல்வது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் 17-ம் தேதி சூரியபகவான் கன்னி ராசிக்குள் நுழைகிறார். செப்டம்பர் 24-ம் தேதி, சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார்.

சுப கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் இரண்டும் எந்த ராசியிலும் இணைந்தால், அவை அசுப பலன்களைத் தருகின்றன. குறிப்பாக திருமண வாழ்க்கை அதிகம் பாதிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போதெல்லாம், அந்த கிரகத்தின் தாக்கம் பலவீனமாகும். சூரியனுடன் சுக்கிரன் இணைவதால் சுக்கிரனின் சுப பலன்கள் குறையும். இதனை சுக்கிரன் – சூரியன் இணைவது யுதி யோகம் எனப்படும்.

Related posts

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika

Daily சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

nathan

இதை படியுங்கள்…திடீரென உடல் எடை கூடுவதற்கு சில காரணங்கள்!!

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் உங்கள முழுமனசோட காதலிப்பாங்களாம் தெரியுமா?

nathan

இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க! முதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

உங்களுக்குதான் முகத்திற்கு பொலிவை தரும் மூக்குத்தியை வலது புறம் குத்த கூடாதா.?!

nathan

அதிக தண்ணீர் குடிப்பதால் உடல்நலக் கேடு!

nathan

இலவங்கப்பட்டை பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

பேன் தொல்லையால் அவதியா? : இதோ சூப்பர் ஐடியா…!

nathan