32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
21 61cb82df2
ஆரோக்கியம் குறிப்புகள்

நீரிழிவு நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடும் கேழ்வரகு அவல்….தெரிஞ்சிக்கங்க…

கேழ்வரகு அவலை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு அருமையான உணவு.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு அவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.

வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.

அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.

Related posts

கரப்பான் பூச்சியை விரட்டியடிக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்கள் பெயர் D எழுத்தில் தொடங்குகிறதா? – தெரிந்து கொள்ளுங்கள்!

nathan

உங்க பணப் – பெட்டியில் இந்த பொருட்களை வெள்ளி கிழமையில் வைத்தால் செல்-வம் பெருகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே! ‘இந்த’ விஷயங்கள மட்டும் தப்பி தவறிக்கூட உங்க கணவனிடம் சொல்லாதீர்கள்…

nathan

முல்தானி மெட்டி தீமைகள்

nathan

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்!!

nathan

நல்லவை எல்லாம் நல்லவை அல்ல… தினம் தவிர்க்கவேண்டிய 10 விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கருத்தரித்தலை தள்ளிப் போட உதவும் 8 இயற்கையான வழிகள்

nathan