26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
21a
எடை குறைய

டயட்

உடல் எடையைக் குறைப்பதற்காகப் பலரும் பல முயற்சிகள் செய்வதை நாம் பார்க்கிறோம். எவ்வளவு முயன்றாலும் ஏறிய எடையைக் குறைப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்பது பலரது அனுபவம். ஆனால், இவ்வளவு கஷ்டப்படாமல் எளிமையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு வீகன் டயட் உதவியாக அமையும் என்பது பலரது அனுபவம்.

சரி… இவ்வாறு பலரும் உடல் எடை குறைப்புக்காக வீகன் டயட்டைப் பின்பற்றுகிறார்கள். இது குறித்து ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.ஜங்க் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட், உடற்பயிற்சியில்லாத வாழ்க்கைமுறை, மன அழுத்தம் போன்ற பல காரணிகளால் உடல் பருமன் பிரச்னை இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கிட்டத்தட்ட உடல் பருமன் என்பது ஒரு உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.

அதிக உடல் எடை ஆபத்துதான். அதிக உடல் எடை உடையவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரித்தல், சில வகைப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், ஃபேட்டி லிவர், மூட்டு வலி, ஸ்லீப் ஏப்னியா(Sleep apnea) போன்ற நோய்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் பருமன் என்பதை அழகியல் சார்ந்த பிரச்னையாக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடியது என்பதை உணர்ந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் அர்னால்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வு ஒன்று தாவர உணவுகளை உண்பவர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்கிறார்கள் என்பதை கண்டறிந்தது. 6 மாதங்கள் நடந்த இந்த ஆய்வில் வீகன் டயட்டை கடைபிடித்தவர்கள் கிட்டத்தட்ட 16.5 பவுண்ட் எடை குறைக்க முடிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல உடலில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும், பி.எம்.ஐ – அளவும் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வில் பங்குபெற்ற வீகன் உணவுப் பழக்கமுடையவர்கள் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த தானியங்களை சாப்பிட்ட போதும் எடைக்குறைப்பு சாத்தியமாயிற்று என்பதுதான். இவர்கள் கலோரிகளைக் கணக்கிட்டு உண்ணவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். Physicians committee for responsible medicine நடத்திய ஆய்வும் வீகன் டயட் உட்கொண்டவர்களுடைய எடை
குறைந்ததை நிரூபித்தது.

இதற்கு காரணம் உண்டு. ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் அதிக கொழுப்பும், ரீஃபைண்ட் கார்போஹைட்ரேட்களும் உள்ளன. மாறாக முழுமையான தாவர உணவுகளில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. தாவர உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ்
சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த திருப்தியான உணர்வளிக்கிறது.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கார்போஹைட்ரேடைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தவிர்க்க வேண்டியது ரீஃபைண்ட் கார்போஹைட்ரேட்டுகளைத்தான். முழு மற்றும் சிறுதானியங்களில் நிறைந்துள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் நமது உடலுக்குத் தேவையானதுதான்.

ஆரோக்கியமான வீகன் டயட்டைப் பின்பற்றும்போது உணவின் அளவைக் குறைக்க வேண்டிய தேவையும் இல்லை. மிக எளிமையாக இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம். அது மட்டுமல்ல நமக்கு விருப்பமான உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்டு மகிழலாம்.
உலகம் முழுதும் பலரும் இந்த டயட் மூலம் அதிக எடையைக் குறைந்திருப்பதாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதை இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும், புத்தகங்களிலும் வாசிக்கிறோம். எடை குறைக்க இந்த டயட்டினை சிலர் குறுகிய காலத்திற்கு மட்டும் பின்பற்றுகிறார்கள். சிலர் நீண்ட காலம் இந்த உணவுமுறையினைப் பின்பற்றுகிறார்கள்.

சில உடல் உபாதைகளால் சிறிதளவும் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையில் சிரமப்படுபவர்கள் கூட இந்த டயட்டினைக் கடைபிடித்து உடல் எடையைக் குறைத்து அதன் பின்னர் உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்குவதும் சிலரது அனுபவமாக உள்ளது. அதிக உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சியும் அவசியம் என்பதனை நினைவில் வைக்கவும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீகன் டயட்டைத் தொடங்குவதற்கு முன் சில முக்கியமான
விஷயங்களை கவனிக்கவும்.

*வீகன் டயட் உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், இது அனைவர்க்கும் ஒரே விதமாக பலனளிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தினால் உடல் எடை அதிகரித்திருந்தால் அதனை குறைக்க இந்த டயட் உதவும்.

*தைராய்டு பிரச்னை அல்லது வேறு நோய்களின் விளைவாக உடல் பருமன் உள்ளவர்கள் உங்களது மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரின் ஆலோசனையை பெற்ற பின்னரே இந்த உணவு முறையினை முயற்சிக்கலாம்.

வீகன் டயட்டில் பல வகைகள் உண்டா?

உலகம் முழுவதும் பலரும் வீகன் டயட்டினைக் கடைபிடிக்கின்றனர். பல நாடுகளில் அவர்களது பாரம்பரிய உணவுகளை அடிப்படையாகக் கொண்டு
விதவிதமான வீகன் ரெசிபிக்களை உருவாக்கியுள்ளனர். வீகன் டயட்டில் பல வகையான உணவுமுறைகள் இருக்கின்றன. அவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

*வீகன் பேலியோ டயட் – தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட பேலியோ டயட்.

*Nutritarian Veegan – அதிக நுண் ஊட்டச்சத்துகள் நிறைந்த தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்டது இந்த டயட்.

*High carb low fat Veegan – பழங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளும், கொழுப்பு குறைந்த தாவர உணவுகளும் இந்த டயட்டின் அம்சங்கள்.

*ஆர்கானிக் வீகன் டயட் – ஆர்கானிக் தாவர உணவுகளை மட்டும் சாப்பிடும் உணவுமுறை.

*ஆயுர்வேதிக் வீகன் டயட் – ஆயுர்வேத உணவுமுறையினை அடிப்படையாகக் கொண்ட தாவர உணவுமுறை.

*Macrobiotic vegan diet – ஜப்பானிய ஜென் உணவு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தாவர உணவுமுறை. சில வகைப் பழங்கள், பல வகையான காய்கறிகள், கடல் தாவரங்கள், பயறு வகைகள், டோபு, மிசோ , பிரவுன் அரிசி போன்றவை இந்த உணவுமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.

*Gluten free vegan diet – க்ளுட்டன் உள்ள தானியங்களைத் தவிர்த்து அரிசி மற்றும் சிறுதானியங்களையும் மற்ற தாவர உணவுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

*Raw vegan diet – சமைக்காத இயற்கை தாவர உணவுகளை அடிப்படையாக கொண்டது.

*80 – 10 – 10 டயட் – கார்போஹைட்ரேட் 80 சதவிகிதமும், புரதம் 10 சதவிகிதமும், கொழுப்பு 10 சதவிகிதமும் கொண்ட டயட் இது. பழங்கள், கீரைகள், கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வீகன் உணவு முறை.

*Whole Food Plant based Diet – முழுமையான தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்டது.

வீகன் வெள்ளரி ராய்தா

தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் – 200 மிலி
எலுமிச்சைச் சாறு – 1 மேசைக்கரண்டி
வெள்ளரிக்காய்
( பொடியாக நறுக்கியது ) – 1/4 கப்
புதினா இலை( நறுக்கியது ) – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
சோம்புத்தூள் – 1/2 தேக்கரண்டி .
செய்முறை

தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்தால் உடனடி வீகன் தயிர் தயார். இத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள், சோம்புத்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறுங்கள். பின்பு புதினா இலை தூவி பரிமாறினால் சுவையான வெயிலுக்கேற்ற வெள்ளரி ராய்தா தயார்.21a

Related posts

எடையைக் குறைக்க என்ன வழி?

nathan

உங்களுக்கு தெரியுமா சும்மா உட்கார்ந்திருக்கும் போது இந்த உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை குறைந்துவிடும்!

nathan

நீங்கள் க்ரீன் டீ குடிச்சு உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா ? படிக்கத் தவறாதீர்கள்…

nathan

உடல் எடையை குறைக்கும் கள்ளிமுள்ளியான்

nathan

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.

nathan

30 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் பயிற்சி

nathan

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தை வைத்து ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்!

nathan

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan