31.3 C
Chennai
Sunday, Oct 13, 2024
prtein shake
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!!

பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற யோசிக்கும் போது, அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது ஜிம் சென்று நீண்ட நேரம் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தான். இருப்பினும் அழகான உடல் கட்டமைப்பிற்கு உடற்பயிற்சி மட்டுமின்றி, அதற்கு சமமான டயட் மற்றும் போதிய ஓய்வும் மிகவும் அவசியம். இந்த மூன்றையும் சரியாக பின்பற்றி வந்தால் நிச்சயம் அழகான கட்டமைப்பைப் பெறலாம்.

இருந்தாலும், ஜிம் சென்று உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயலும் முன், உடற்பயிற்சி செய்ய உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்களைப் பெற வேண்டும். அவை இருந்தால் தான் தசைகளானது நன்கு வளர்ச்சியடைந்து, நாம் விரும்புமாறு உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக உடலை கட்டமைப்புடன் வைக்க ஜிம் செல்லும் முன், மருத்துவரையோ அல்லது உடற்பயிற்சியாளரிடம் நன்கு கலந்தாலோசிக்க வேண்டும்.

இங்கு பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் உடற்பயிற்சியாளரிடம் கலந்தாலோசித்து உட்கொண்டு வந்தால், தசைகள் நன்கு வளர்ச்சியடைந்து, கட்டமைப்பான உடலைப் பெறலாம்.

பால்

விளையாட்டு வீரர்களும், உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள நினைப்போருக்கும் பால் மிகவும் அருமையான உணவுப் பொருள். ஏனெனில் பாலில் புரோட்டீன், கால்சியம் மற்றும் இதர அமினோ ஆசிட்டுகள் நிறைந்துள்ளன. எனவே தினமும் எந்நேரம் வேண்டுமானாலும் பாலை அருந்தலாம். பின் பாருங்கள் உங்கள் தசைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று.

மாட்டிறைச்சி

ஆம், மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் கிரியேட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இதனால் இதில் உள்ள ஜிங்க் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும், இரும்புச்சத்து வலிமையை அதிகரிக்கவும், கிரியேட்டின் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவும். எனவே மாட்டிறைச்சி உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயல்வோருக்கு மிகவும் ஏற்ற உணவு.

சிக்கன்

சிக்கனில் புரோட்டீன் மட்டுமின்றி, அமினோ ஆசிட்டுகளும் நிறைந்துள்ளதால், அதனை உடல் கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயலும் போது உட்கொள்வது நல்லது. அதிலும் சிக்கனின் மார்புப் பகுதியில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், அவற்றை சாப்பிடுவது சிறந்தது.

மீன்

மீனில் கொழுப்புக்கள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் இருப்பதுடன், இதில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் இருப்பதால், இதனை சாப்பிடுவதும் நல்லது.

வேர்க்கடலை வெண்ணெய்

கலோரிகள், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்களை உள்ளடக்கியது தான் வேர்க்கடலை வெண்ணெய். இது உடல் கட்டமைப்பில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது உடலின் வலிமையை அதிகரிக்கும்.

ஓட்ஸ்

காலையில் ஜிம் முடிந்து வந்ததும், ஒரு பௌல் பால் சேர்த்த ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் உள்ள கார்போஹைட்ரேட் இழந்த ஆற்றலை மீண்டும் பெற வைப்பதுடன், இது விரைவில் செய்து சாப்பிடக்கூடியதும் கூட.

முட்டை

மிகவும் விலை குறைவான புரோட்டீன் அதிகம் உள்ளடக்கிய உணவுப் பொருள் தான் முட்டை. ஏனென்றால் ஒரு முட்டையில் 7-8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த முட்டையை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மூன்று வகையான சர்க்கரை நிறைந்துள்ளது. அவை பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ். இவை மூன்றுமே உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் உடலுக்கு அவசியமானவை. மேலும் வாழைப்பழத்தில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை உட்கொள்வது இன்னும் சிறந்தது.

வான்கோழி

வான்கோழியிலும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. மேலும் கொழுப்புக்களும் குறைவாக உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்ப்பதும் தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுடன், வைட்டமின் பியும் நிறைந்துள்ளதால், இதனை உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் எடுத்து வருவது மிகவும் நல்லது.

செம்மறி ஆட்டுக்கறி

செம்மறி ஆட்டுக்கறியிலும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி12 போன்றவை இருப்பதால், இவற்றையும் டயட்டில் சேர்ப்பது நல்ல வலிமையுடன், ஆற்றலையும் கொடுக்கும்.

சைனீஸ் முட்டைக்கோஸ் (Bok Choy)

சைனீஸ் முட்டைக்கோஸில் கலோரிகள் இல்லாவிட்டாலும், இதில் கால்சியம், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இவற்றை உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது உணவில் சேர்ப்பது நல்லது.

பாதாம்

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த பாதாம் தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இவை உடற்பயிற்சியின் போது தசைகளில் ஏற்படும் காயங்களை சரிசெய்யவும் செய்யும்.

கடல் சிப்பி

ஜிங்க் அதிகம் நிறைந்த கடல் சிப்பியை சேர்த்து வந்தால், ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதுடன், இதில் புரோட்டீனும் வளமாக இருப்பதால், தசைகளின் வளர்ச்சி மற்றும் அதில் ஏற்படும் காயங்களை தானாக சரிசெய்யவும் உதவியாக இருக்கும்.

கைக்குத்தல் அரிசி

நிறைய பாடி பில்டர்களைப் பார்த்தால், அவர்கள் தங்கள் உணவில் கைக்குத்தல் அரிசியை சேர்த்திருப்பார்கள். ஏனெனில் அதில் காம்ப்ளக்ஸ் கார்போர்ஹைட்ரேட் உடலில் ஆற்றலை எப்போதும் வைத்திருக்க உதவும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கூட வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நல்ல அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை உடல் கட்டமைப்பில் இருக்கும் போது, டயட்டில் சேர்த்து வந்தால், தசைப் பிடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பருப்பு வகைகள்

பருப்புக்களில் நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட்டும் வளமாக உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்து வந்தால், உடலின் ஆற்றலானது தக்க வைப்பதுடன், சக்தியும் அதிகரிக்கும்.

ஆப்பிள்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இவற்றில் கார்போட்ஹைரேட், எலக்ட்ரோலைட் மற்றும் நார்ச்சத்து நல்ல அளவில் நிறைந்துள்ளது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் மோனாஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுபவை. மேலும் இவை தசைகளில் ஏற்படும் வலி மற்றும் காயங்களை சரிசெய்து குணமாக்கவும் உதவும். எனவே சமைக்கும் போது ஆலிவ் ஆயில் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.

காட்டேஜ் சீஸ்

ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள காட்டேஜ் சீஸில் 28 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உடற்பயிற்சி செய்யும் போது உட்கொண்டு வந்தால், உடலில் புரோட்டீன் வெளியேறுவது தக்க வைக்கப்படும்.

தயிர்

தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி-யுடன், தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் நிறைந்துள்ளது.

கருப்பு உளுத்தம் பருப்பு

முழு உளுத்தம் பருப்பில் வைட்டமின் பி, கே, சி மற்றும் ஏ மட்டுமல்லாமல், குறைந்த அளவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், வளமான அளவில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் ஒரு கப் உளுத்தம் பருப்பில் 15 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே இவையும் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.

கொண்டைக்கடலை

ஒரு கப் கொண்டைக்கடலையில் 45 கிராம் புரோட்டீனும், 12 கிராம் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், இதனை வேக வைத்து ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவது, தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 5 ராசி பெண்கள் நாடகமாடுவதில் கில்லாடிகளாம்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்..!அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள் ..

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika

பெண்களே உஷார்!பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்னு தெரியுமா?

nathan

வெங்காயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவதனால் உடம்பிலுள்ள கெட்ட சளி பறந்து போயிடும் தெரியுமா?

nathan

பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்.. விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு ..

nathan