29.2 C
Chennai
Friday, May 17, 2024
5
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயின் அற்புத நன்மைகள்

நம்மில் பலர் பச்சை மிளகாயை காரத்திற்கும் சுவைக்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி – பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

ஜீரண சக்தி – பச்சை மிளகாயை மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதன் மூலம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

இரும்புச்சத்து – இதில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவுவதோடு, அனீமியாவை எதிர்த்தும் போராடுகிறது.

சர்க்கரை நோய் – சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

எலும்பு பலமாகும் – பச்சை மிளகாயில் அதிகப்படியான வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறாது. இதோடு எலும்புகளும் வலு பெறும்.5

உடல் எடை – பச்சை மிளகாய் கொழுப்பை குறைக்கும். இதில் கலோரி இல்லை என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

இதயம் – பச்சை மிளகாயில் மினரல்ஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை சீரான இதயத்துடிப்பிற்க்கும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

Related posts

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

பாலுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான கைக்குத்தல் அரிசி முட்டை தம் பிரியாணி

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

nathan

இதை படியுங்கள்.. எது நல்லது, எப்போது சாப்பிடலாம்? பசு நெய், எருமை நெய்…

nathan

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

nathan

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முறையில் உடற்கட்டை மேம்படுத்துவது எப்படி?

nathan

சைவம் – அசைவம் எது உடலுக்கு நல்லது?

nathan