அழகு குறிப்புகள் முகப் பராமரிப்பு

சென்சிடிவ் சருமத்தினருக்கான ஃபேஸ் ஸ்கரப்

 Make-a-Wacky-but-Nice-Homemade-Facial-Scrub-Step-5
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அனைத்துப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்த முடியாது. எதைப் பயன்படுத்தினாலும், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, இருக்கும் அழகும் போய்விடும். ஆகவே சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் அழகை அதிகரிக்க எந்த ஒரு பொருளை பயன்படுத்தும் முன்னும் பலமுறை யோசிக்க வேண்டும்.சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க ஒருசில அற்புதமான ஃபேஸ் ஸ்கரப்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாத்திடுங்கள்.

• வால்நட் ஸ்கரப் :

1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் வால்நட் பேஸ்ட், 1 டீஸ்பூன் பாதாம் பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் மெதுவாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமம் பொலிவோடு மின்னும். இதனை வாரும் இருமுறை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

• ஓட்ஸ் ஸ்கரப் :

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள பருக்கள், வெயிலினால் கருமையடைந்த சருமம், சருமத்தில் செதில்செதிலாக வருவது, சருமம் வறட்சியடைவது போன்றவை நீங்கும்.

• தக்காளி ஸ்கரப் :

தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்க்கரையில் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் மற்றொரு பாதியைக் கொண்டு முகத்தை மீண்டும் ஸ்கரப் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வரலாம். வண்டியில் செய்பவர்கள் இந்த தக்காளி ஸ்கரப்பை தினமும் உபயோகித்து வந்தால் சருமத்தில் தூசியால் படியும் கருமை படிப்படியாக மறையும்.

 

Related posts

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்

nathan

இந்த அழகு குறிப்புகளை படுக்கச் செல்லும் முன்பாக பயன்படுத்தி பாருங்க….!

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: