22 6320e4cc75d81
ஆரோக்கிய உணவு

கம்பு லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 2 கப்
வெல்லம் – 2 கப்
பாதாம் – 10
ஏலக்காய் – 10
பிஸ்தா – 10
முந்திரி – 10
திராட்சை – 10
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

Related posts

தயிர் சாப்பிட்டால் ஆரோக்கியமா?

nathan

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!

nathan

சுவையான பூசணிக்காய் சாம்பார்

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா நுங்கில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

nathan

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி

nathan

சுவையான நண்டு ஆம்லெட் – எப்படி செய்வது?

nathan

தொப்பையைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்:

nathan

சோள ரொட்டி

nathan