33.3 C
Chennai
Saturday, May 18, 2024
HI2y6Iz
சிற்றுண்டி வகைகள்

மனோஹரம்

என்னென்ன தேவை?

அரிசி மாவு – 2 கப்,
பயத்தமாவு – 1 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் – பிசைவதற்குத் தேவையானது.

பாகிற்கு…

வெல்லம் – 1/4 கிலோ,
தண்ணீர் – 1 கப்.


எப்படிச் செய்வது?

அரிசி மாவு, பயத்தம் மாவு, நெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் காயவைத்து பிசைந்த மாவை பெரிய (அ) சின்ன ஓட்டை இருக்கும் முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, ஆறியதும் பெரிய துண்டுகளாக உடைக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்தால் போதும். பாகு முத்தக் கூடாது. பாகு வாசனை வந்து, பொங்கிக் கொதித்தவுடன் கீழே இறக்கிவைத்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உடைத்த முறுக்கு துண்டுகளைப் போட்டு, அதன் மேலே பாகை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.HI2y6Iz

Related posts

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

குழந்தைகள் விரும்பும் உளுத்தங்களி!

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்

nathan

முளயாரி தோசா

nathan

பட்டர் முறுக்கு செய்வது எப்படி? எச்சில் ஊற வைக்கும் சுவை

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan