33.3 C
Chennai
Saturday, May 18, 2024
mango chutney 29 1461918024
சட்னி வகைகள்

ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மார்கெட்டில் மாங்காய் விலை குறைவில் விற்கப்படும். அந்த மாங்காயைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

அதிலும் ஆந்திரா ஸ்டைலில் மாங்காய் சட்னி செய்து சுவைத்தால் ருசியாக இருக்கும். இங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1/2 கப் (நறுக்கியது) பாசிப்பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் வெல்லம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான பொருட்கள்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்கவும். பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி!!!

mango chutney 29 1461918024

Related posts

ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி

nathan

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

nathan

தக்காளி துளசி சட்னி

nathan

சுவையான கேரட் சட்னி

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியத்தை தரும் பீர்க்கங்காய் சட்னி

nathan

வல்லாரை கீரை சட்னி

nathan

பீட்ரூட் சட்னி

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

சூப்பரான மிளகாய் சட்னி ருசியாக செய்வது எப்படி?

nathan