29.5 C
Chennai
Sunday, May 19, 2024
ஆரோக்கிய உணவு

உளுந்தங்கஞ்சி

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.

உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு.

உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும்.

முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள் :
1) உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)
2) பச்சரிசி அரை டம்ளர்
3) வெந்தயம் ஒரு தேக்கரண்டி
4) பூண்டு 20 பல்லு
5) வெல்லம் அல்லது கருப்பட்டி
இனிப்புக்கு ஏற்றது போல்
6) தேங்காய் ஒரு மூடி

செய்முறை:
உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.

(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)

Related posts

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!!

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

Health benefits eating methi seeds- வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

கருப்பை புற்று நோய்க்கான டயட்

nathan

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

சூப்பர் டிப்ஸ் ! உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினம் பாதாம் உண்ணுங்கள்…!

nathan

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு உதவும் உணவுகள் – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan