31.9 C
Chennai
Wednesday, May 22, 2024
57973813 72b9 4913 b589 54ed41ea3b88 S secvpf
உடல் பயிற்சி

சரியான முறையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்

ஜிம்மில் சென்று உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முன், போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, ஆற்றல் கிடைக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதையெல்லாம் பின்பற்றி, தினமும் சரியான அளவு உடற்பயிற்சியை மேற்கொண்டால் தான் நல்ல பலனைப் பெற முடியும். நீங்கள் தினமும் போதிய அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வழிகள் உள்ளன.

சிலருக்கு உடற்பயிற்சியை செய்த பின் சரியான தூக்கம் கிடைக்காது. இந்நிலை அவர்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதற்கான அறிகுறி. ஆனால் ஒருவர் படுத்ததும் தூங்கிவிட்டால், அவர் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார் என்று அர்த்தம்.

உடற்பயிற்சியின் போது வியர்வை வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்வதில்லை என்று அர்த்தம். மேலும் உடற்பயிற்சிக்கு முன் நிறைய தண்ணீர் குடித்தால் தான், உடற்பயிற்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, உடற்பயிற்சியை சரியாக செய்ய முடியும். முன்பு இருந்ததை விட, சமீப காலமாக உங்கள் உடலின் ஆற்றல் அதிகரித்துள்ளதா? அப்படியெனில் நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சியை செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் மிகவும் எடை குறைவானவராக இருந்து, உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் நன்கு பசி எடுக்கிறது என்றால் அது நல்ல அறிகுறியே. ஒருவேளை நீங்கள் எடையைக் குறைக்க நினைப்பவராயின், கலோரிகள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, பசியின் போது நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஜிம்மில் சேர்ந்திருந்து, உங்கள் எடையில் மாற்றம் தெரிந்தால், அதுவும் நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நேரத்தில் எடையைக் குறைக்க மேற்கொண்ட டயட்டையும், செய்து வரும் உடற்பயிற்சியையும் தவறாமல் தினமும் பின்பற்றுங்கள்.
57973813 72b9 4913 b589 54ed41ea3b88 S secvpf

Related posts

தர்பூசணி புதினா லெமன் ஜூஸ்

nathan

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

nathan

சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாயு முத்திரை

nathan

இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி

nathan

பருமனான கைகளுக்கு பயிற்சி! ~ பெட்டகம்

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan