chettinadbeanscau
அழகு குறிப்புகள்

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர்

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1

* பச்சை பீன்ஸ் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் காய்கறிகளை சரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் காலிஃப்ளவர் மற்றும் பீன்ஸ் இரண்டையும், கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகும் வரை வேக வைத்து இறக்கிக் கொண்டு, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

* காய்கறிகளானது மசாலாவுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், ஒரு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பீன்ஸ் பொரியல் தயார்.

Related posts

சூப்பரான முட்டை பிரை

nathan

முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற இப்படி செய்து வாருங்கள்!…..

sangika

கண்ணனின் திருமணத்தினால் ஏற்பட்ட பிரிவு! விறுவிறுப்பான ப்ரொமோ

nathan

கூந்தலுக்கு ஆரோக்கியமாகும் வழிகள்,beauty tips hair tamil language

nathan

நகங்கள் உடைந்து போகிறதா…நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்…

nathan

தேங்காயில் அழகு குறிப்புகள்

nathan

அழகான பாதங்களுக்கு…

nathan

உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

nathan

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan