ஆயுர்வேத முறைப்படி உணவின் இறுதியில் நீர் அருந்துவதென்பது விஷத்தை உட்கொள்வதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. இது ஜதார்கனியை (நம் உடல் உணவை செரிக்க தேவையான ஆற்றல்) அழிப்பதன் மூலம் நம் உடலின் உள்ளே உணவை செரிக்க செய்வதற்கு பதிலாக அதனை செயலிழக்க செய்கிறது. இதன் காரணமாக நம் உடலில் வாயு மற்றும் அமிலம் உருவாகி ஒரு தீங்கு மிக்க சுழற்சி நம் உடலில் தொடங்குகிறது.
உணவை உண்டு முடித்த உடனே நீரை அருந்துவதன் விளைவாக நம் உடல் 103 விதமான வியாதிகளுக்கு ஆளாக நேரிடலாம் என்று மகரிஷி வக் பட் கண்டறிந்துள்ளார். இங்கு ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இடைவெளி அவசியம்
உணவு மற்றும் நீர் ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச இடைவெளி 1 1/2 மணிநேரத்திலிருந்து 2 1/2 மணிநேரம் இருக்க வேண்டும். இந்த இடைவெளி நாம் வாழ்கின்ற இடத்தின் புவியியல் தன்மை மற்ற பிற காரணிகளை சார்ந்து மாறுபடுகிறது. மலைப்பகுதிகளில் இந்த கால இடைவெளி அதிகமானதாகவும் மற்றும் சமவெளி பகுதி, வெப்பம் மிகுந்த இடங்கள் ஆகியவற்றில் இது குறைவானதாகவும் உள்ளது. நாம் வாழ்கின்ற சுற்றுப்புற பகுதிகளை சார்ந்து நம் உடல் உணவை செரிக்கும் தன்மை மாறுபடுவதால் இந்த கால இடைவெளியும் மாறுபடுகிறது.
உணவுக்கு முன் நீர் குடிக்கவும்
உணவு உண்பதற்கு முன் குறைந்தது 40 நிமிடங்களுக்கு முன்பே நீரை அருந்தி விட வேண்டும்.
உணவுக்கு பின் வெதுவெதுப்பான நீர் எடுக்கலாம்
உணவு உண்டு முடித்த பின் வாயையும் தொண்டையையும் சுத்தம் செய்யும் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு மடக்குகள் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளலாம்.
பழச்சாறுகள், மோர் எடுப்பது நல்லது
நாம் தாகமாக உணர்ந்தோமேயானால் அந்தந்த காலநிலையில் கிடைக்கும் பழங்களிலிருந்து பெறப்படும் சாற்றினை காலை உணவிற்கு பின்னும் மோரை மதிய உணவிற்கு பின்னும் எடுத்து கொள்ளலாம். இரவு உணவிற்கு பின் பால் அருந்தலாம். இவை அனைத்திலும் பெரும்பாலான அளவு நீர் அடங்கியுள்ள போதிலும், அவற்றின் குணநலன்கள் முற்றிலும் வேறானவை. இவை நம் உடலுக்கு தீங்கிழைப்பதற்கு பதிலாக நம் உடலுக்கும் அதன் செரிமானத்திற்கும் துணை புரிகிறது.
மெதுவாக குடிக்கவும்
சூடான தேநீர் அருந்துவது போல நீரை ஒவ்வொரு மடக்காக மெதுவாக குடியுங்கள்.
நீரின் அளவு
காலையில் செய்ய வேண்டிய முதல் விஷயம் நீர் அருந்துவது ஆகும். இதனை நம் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப சூடான தேநீர் அருந்துவது போல வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக அதிக அளவிலான எச்சில் நமது வயிற்று பகுதிக்கு செல்ல வாய்ப்பு அதிகம். செம்பினாலான பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் எனில் அதனை வெதுவெதுப்பாக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தாமிரதினாலான பாத்திரத்தில் உள்ள நீர் வெதுவெதுப்பான நீரின் குணநலன்களை ஏற்கனவே பெற்றிருக்கும். மண் பானையில் வைக்கப்பட்டிருக்கும் நீர் எனில் அதனை வெதுவெதுப்பாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
18 வயதிற்கு குறைவானவர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் 1.5 -லிருந்து 2 டம்ளர்கள் நீர் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற அனைவரும் 1.25 லி அதாவது 3 டம்ளர்கள் நீரை எடுத்து கொள்ள வேண்டும். தாகம் இல்லாமல் ஒருவர் அருந்த வேண்டியது இந்த அளவிலான நீரே ஆகும். சிறு சிறு மடக்குகளாக மெதுவாக நீரை அருந்த வேண்டும். இதனை 6 மாதங்களுக்கு முயன்று உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணருங்கள். நீங்கள் புத்துணர்வாகவும், இலகுவானவராகவும் உணர்வீர்கள். மேலும் உங்களது உறக்கம், செரிமானம், வலிகள் மற்றும் இதயம் ஆகியவற்றில் மேம்பட்ட செயல்திறனை உணர்வீர்கள்.
செம்பு பாத்திரத்தில் உள்ள நீர்
நீங்கள் செம்பினாலான பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை பயன்படுத்துபவர் எனில் 3 மாதங்கள் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு பிறகு 2 வாரங்களுக்கு அதனை நிறுத்தி கொள்ளலாம்.
குளிர்ச்சியான நீர் வேண்டாம்
எப்போதும் குளிர்ச்சியான நீரை குடிக்காதீர்கள். வெதுவெதுப்பான அல்லது உடல் வெப்ப நிலைக்கு ஏற்ற நிலையில் உள்ள நீரை மட்டும் குடியுங்கள். குளிர்ந்த நீரை குடிப்பதென்பது நம் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நம் உடல் உறுப்புகளை பலவீனமுற செய்து அவற்றை செயலிழக்க செய்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, சிறுநீரக கோளாறு மற்றும் மூளையில் இரத்த ஒழுக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குளிரூட்டபட்ட்ட நீரை குடிப்பது பில விதமான சிக்கல்களுக்கு காரணமாக அமையும். பெருங்குடல் சுருங்குதல் போன்ற பல விதமான சிக்கல்கள் தோன்றுகின்றன. இது மற்ற குளிரூட்டப்பட்ட உணவு வகைகளுக்கும் பொருந்தும்.