27.5 C
Chennai
Wednesday, Nov 6, 2024
uiyi
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

beauty secrets from grandma – பாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள்

அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.

அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான்

ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே. ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது. மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிகளிடம் இருந்து சுட்ட அழகுக் குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா

yiyui

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.
iuoui

முகத்தை கழுவுதல்
முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

oiolp
ஆவிப் பிடித்தல்
ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

iyui
பழங்கள்
கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
uiyi

முடி மசாஜ்
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

தயிர்
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

uyi6t
சூப்பர் மாய்ஸ்சுரைசர்
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

yu
எலுமிச்சை
பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான். ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

ahhh
நெய்
உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

unnamed 1
கடுகு எண்ணெய்
கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

Related posts

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதனால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்!!!

nathan

காலையில் தினமும் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்களுக்கு தொந்தரவு தரும் ‘விசித்திரமான’ ஆண்கள்!…

sangika

இயற்கை அழகு குறிப்புகள்.. முகம் மற்றும் மேனி அழகுக்கு..

nathan

மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…

sangika

சருமத்திற்கான சூப்பர் ஃபேஸ் வாஷ் எப்படி இயற்கை முறையில் தயாரிக்கலாம்?

nathan

த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! ஜனனியை பார்த்து சொன்ன கமல்

nathan

அம்மாடியோவ் ! கர்ணன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

nathan