32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப்பில் உள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

அதைப் போக்க சில எளிய வழிகள்:

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.

* கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, தோல் மிருதுவாகும்.

* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

* மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

* உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோருக்கு பக்கவாதம் வரும் ஆபத்து..!

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்ய!…

nathan

பெண்களே அழகான பாதங்களுக்கு….

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan

நடிகை சமந்தா வேறொருவருடன் தொடர்பு…. குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை…

nathan

முள் போன்ற கரும்புள்ளிகள் அதிகமாக பெண்களுக்குத்தான் காணப்படும். அவர்களின் முக அழகையே கெடுக்கும் மூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் … அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா?

nathan