fair face
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சிகப்பாக சில டிப்ஸ்..

சிறிதளவு தேன், பாலேடு, வெள்ளரிச்சாறு, கடலைமாவு சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர கருப்பான சருமம் சிவப்பாகும்.

ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும் குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். பிறகு சந்தனத்தில் பால் சேர்த்து பேக் போடவும். இதனால் நிச்சயம் முகம் பொலிவு பெறும்.

சூடான் பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் பொலிவு பெறலாம்.

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Related posts

30 வயதை நெருங்குபவரா நீங்கள்? கட்டாயம் இவற்றை செய்யுங்கள்!

sangika

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன….

sangika

சரும பொலிவையும் மெருகேற்ற வாழைப்பழ தோல்

nathan

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan

இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிவதன் முக்கியத்துவம் என்ன?தெரிஞ்சிக்கங்க…

nathan

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்!!

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

பேச்சுலர்களுக்கான முட்டை கிரேவி

nathan

முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்

nathan