உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது.
நெல்லிக்காயுடன் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது நசுக்கி ஜூஸாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது. இதுப்போக முடியை திடமாக்க, சருமத்தின் அமைப்பை மேம்படுத்த மற்றும் சருமத்தில் ஒளி வீசிடவும் கூட அவை உதவி புரிகிறது. ஆனாலும் கூட இப்போது நெல்லிக்காய் ஜூஸால் ஏற்படும் உடல் எடை குறைப்பு பயனைப் பற்றி மட்டுமே பார்க்கப் போகிறோம்.
உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். உடல் எடை குறைப்பில் எப்படி இது உதவி புரிகிறது என்பதை இப்போது பார்க்கலாமா?
மெட்டபாலிசம் மேம்படும்
உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவும் என பல ஆய்வுகள் நம்ப வைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடலின் மெட்டபாலிச வீதம் குறைவாக இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். மெட்டபாலிச மேம்பாட்டினால், உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதனால் உடலின் மெட்டபாலிச வீதத்தை அதிகரிக்க உதவுகிறது நெல்லிக்காய் ஜூஸ். உடலின் புரதம் கூட்டுணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது. எவ்வளவு புரதம் உடைகிறதோ, அந்தளவிற்கு கூடுதல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் மெட்டபாலிச வீதம் அதிகரிக்கிறது. அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் உதவுகிறது.
நச்சுத்தன்மையை நீக்கும் பணி
உடல் எடை அதிகரிப்பதற்கு நச்சுத்தன்மையின் தேக்கமும் ஒரு காரணமாகும். அதனால் உடல் எடையை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட இடைவேளையில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஒரு முகாமை உங்கள் உடல் நடத்த வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும் குணங்களை நெல்லிக்காய் ஜூஸ் கொண்டிருக்கிறது. இவ்வகையான நச்சுக்கள் உங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்த உடல் எடையும் அதிகரிக்கும். அதனால் உடல் எடையை அதிகரிக்க செய்யும் இவ்வகையான நச்சுக்களை நீக்க நெல்லிக்காய் ஜூஸ் பெரிதும் பயன்படுகிறது. சீரான முறையில் நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தால், உங்கள் உடலின் செரிமான வீதம் சீராக இருக்கும். அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும்.
சக்தி வாய்ந்த புத்துணர்ச்சி
நெல்லிக்காய் என்பது புத்துணர்ச்சி அளிப்பதில் சக்தி வாய்ந்ததாகும். அதாவது உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் தேவையான நேரத்தில் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கவும் இது உதவும். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸை பருகினால், உடலமைப்பின் ஆற்றல் சக்தி மேம்படும். எந்தளவுக்கு ஆற்றல் சக்தியுடன் உங்கள் உடல் உள்ளதோ, அவ்வளவு வேகத்தில் உடல் எடை குறையும். ஈடுப்பாடின்மை உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கி விடும். அதனால் நெல்லிக்காய் ஜூஸ் பருகி உடலை எப்போதும் முழு ஆற்றல் திறனுடன் வைத்திருங்கள். நெல்லிக்காயை கொண்டு உடல் எடை குறைப்பதால் கிடைக்கும் பயனில் இதுவும் ஒன்றாகும்.
ஒட்டுமொத்த பயன்கள்
நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போக பல உடல்நல பயன்களையும் அது கொண்டுள்ளது. இவைகளால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்கும். உடல் எடை குறிப்பும் அதில் ஒரு அங்கமாகும். கனிமங்கள், வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி) மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை நெல்லிக்காய் ஜூஸ் அளிப்பதால், உடல் திடமாக கட்டுக்கோப்புடன் விளங்கும். அதனால் உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸை சீராக குடிக்க வேண்டும்.