27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
7
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப சோதனைக் கருவியைப்எப்போது பயன்படுத்துவது…?

ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் வாழ்க்கையின் புதிய கட்டமான கர்ப்பமாகும் தருணத்தில் ஆச்சரியமான பல விஷயங்களை உணர்வதோடு, மன அழுத்தத்துடனும் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்குமே கருத்தரிப்பது என்பது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அப்படி கருத்தரிக்கக்கூடிய தருணத்தில், கருத்தரித்து விட்டோமா என்பதை அக்காலத்தில் மருத்துவரிடம் சென்று தான் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

அவசியம் படிக்க வேண்யவை: 

கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்கள்!!! 

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக உள்ளோமா என்பதை கர்ப்ப சோதனைக் கருவியைக் கொண்டு வீட்டிலேயே உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

மாதவிடாய் தவறுதல்

கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் முதன்மையானது தான் மாதவிடாய் தவறுவது. அப்படி திடீரென்று மாதவிடாய் சுழற்சியானது தவறினால், கர்ப்ப சோதனைக் கருவியை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

வாந்தி மற்றும் குமட்டல்

காலை வேளையில் அதிகப்படியான சோர்வையோ அல்லது வாந்தி, குமட்டல் போன்றவற்றையோ சந்தித்தால், அதுவும் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மென்மையான மார்பகங்கள்

கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தும் போது சரியான முடிவு தெரிய வேண்டுமானால், மார்பகங்கள் திடீரென்று மிகவும் மென்மையாக இளகி காணப்படும் போது மேற்கொள்ள வேண்டும்.

லேசான இரத்தக்கசிவு மற்றும் பிடிப்புகள்

இந்த முறை சற்று கடினமானதாக இருந்தாலும், ஓவுலேசன் காலம் முடிந்து 6-12 நாட்களுக்குள் இத்தகையவற்றை உணர்ந்தால், அப்போது கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.

உணவின் மீது நாட்டம்

கர்ப்பமாகும் போது ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி ஏற்பட்டால், உடனே தவறாமல் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும்.

ஆரம்பத்தில் வேண்டாம்

முக்கியமாக மாதவிடாய் தவறிய ஆரம்ப கட்டத்திலேயே கர்ப்ப சோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அப்போது சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு குறைவாக இருக்கும்.

இதனால் தவறான முடிவுகள் தான் தெரியும். எனவே மாதவிடாய் தவறிய 1-2 வாரத்திற்கு பின், கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஏனென்றால் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு அதிகரிக்கும். இதனால் சரியான முடிவு கிடைக்கும்.

Related posts

தண்ணீரில் விரைவாக பிரசவம்

nathan

பர்வதாசனம்

nathan

அமர்ந்து வேலைசெய்பவர்கள் கட்டாயம் இத படிங்க!

sangika

உடற்பயிற்சி செய்பவர்களின் கவனத்துக்கு…

sangika

கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதற்கு தெரியுமா?

sangika

குடும்ப தலைவிகளுக்கு சிறந்த ஆலோசனைகள்!…

sangika

எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லையா?

nathan

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

nathan

தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி

nathan