28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
14 14000596
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை பெற்ற பின்னர் கணவருடன் ரொமான்ஸ் செய்ய முடியவில்லையா?

குழந்தைப் பெற்ற பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் கணவருக்கும், மனைவிக்கும் இடையே சிறு பிரச்சனைகள் வரக்கூடும். இது சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இத்தகைய பிரச்சனையை கணவன் மற்றும் மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டாலு, எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் குழந்தை பெற்ற பின்னர் பாலுணர்ச்சியைப் பெறுவது என்பது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் குழந்தை பிறந்த பின்னர் அவர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை குழந்தையுடனேயே செலவழிப்பதால், கணவரை கண்டுகொள்ள முடியாமல் போகும். இதனால் பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் ஆண்கள் தான் சற்று புரிந்து கொண்டு, பொறுமையாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி பெண்களும் அவ்வப்போது தங்கள் கணவருடன் நேரத்தை செலவழிக்க முயல வேண்டும். குறிப்பாக கணவருடன் சிறு சிறு ரொமான்ஸ் மேற்கொள்ள வேண்டும். இங்கு அப்படி குழந்தை பிறந்த பின்னர் கணவருடன் ரொமான்ஸ் செய்ய சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நேர்மறை எண்ணங்கள்

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். இதனால் அவர்கள் எப்போதும் எதிர்மறை எண்ணங்களுடனேயே இருப்பார்கள். இப்படியே இருந்தால், தேவையில்லாமல் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சண்டைகள் வந்து கொண்டே தான் இருக்கும். எனவே எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண முடிவதுடன், உங்கள் கணவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்.

நறுமணமிக்க மெழுகுவர்த்திகள்

நல்ல நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை வீட்டில் ஏற்றி வைத்தால், வீடு நறுமணத்துடன் இருப்பதோடு, மனமும் அமையுடன் இருக்கும். இப்படி மனம் அமைதியாக இருந்தால், கணவருடன் ரொமான்ஸ் செய்ய முடியும்.

சுத்தமான காற்று

சோர்வுடன் இருக்கும் போது, அதனை போக்க நல்ல சுத்தமான காற்றினை சுவாசிக்க சிறு தூரம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இப்படி மேற்கொண்டால், கணவருடன் சந்தோஷமாக இருக்க முடியும்.

சாக்லெட்

பாலுணர்வைத் தூண்டுவதில் சாக்லெட்டிற்கு இணை வேறு எதுவும் வர முடியாது. எனவே அவ்வப்போது சாக்லெட் சாப்பிட்டு, மனச்சோர்வை நீக்கி, கணவரின் மீது காதலை

பேசுங்கள்

முக்கியமாக இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசி, புரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசினால், அதற்கேற்றாற் போல் தீர்வு கண்டு, காதல் வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.

வெளியே செல்லலாம்

முடிந்தால் கணவருடன் வெளியே செல்லலாம் அல்லது வீட்டிலேயே இரவு நேரத்தில் சற்று ரொமான்ஸாக வீட்டை அலங்கரித்து டின்னர் சாப்பிடலாம். இதன் மூலமும் பாலுணர்வு அதிகரிக்கும்.

மேஜிக் உணவுகள்

பாலுணர்வை தூண்டுவதற்கு என்று சில உணவுகள் உள்ளன. அவற்றை உட்கொண்டு வந்தால் பாலுணர்ச்சி அதிகரிக்கும். அதிலும் செலரி, அவகேடோ, வாழைப்பழம் மற்றும் பாதாம் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவை பாலுணர்வை அதிகரிப்பதுடன், தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும்.

சின்ன சின்ன விஷயங்கள்

கணவருடன் சேர்ந்து குளிப்பது, படுக்கையில் கணவருடன் சேர்ந்து உட்கார்ந்து குழந்தையிடம் பேசுவது போன்றவையும் பாலுணர்வை அதிகரிக்கும்.

குழந்தையுடனான நேரம்

கணவனும், மனைவியும் குழந்தையுடன் சேர்ந்து உட்கார்ந்து, குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி பேசினால், அதுவும் ஒரு கட்டத்தில் இருவருக்குள் இருக்கும் பாலுணர்வை தூண்டும்.

Related posts

குழந்தை தாய்பால் குடிக்க மறுப்பது ஏன்?

nathan

வீட்டு வைத்தியம் …!

nathan

அம்மாவா, நானா, கணவன் மனைவியிடையே வரும் பிரச்சினையின் தீர்வு

nathan

உங்க பல் அசிங்கமா மஞ்சள் நிறத்தில் இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள் – ‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

எலுமிச்சை ஜூஸ்ஸினை விரும்பி குடிப்பவரா நீங்கள்.அப்ப இத படிங்க!

nathan