33.9 C
Chennai
Friday, May 23, 2025
Untitled desig
Other News

கேரளாவில் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த பெண் டாக்டருக்கு ஏற்பட்ட விபரீதம்!

திருமணமாகி விவாகரத்துப் பெற்ற பெண் டாக்டர் ஒருவர், வாலிபர் ஒருவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்த நிலையில் அவருடன் ரிலேஷனில் இருந்தவராலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் என்ற பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சோனா. திருமணமான இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக கிளினிக் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பெண் டாக்டரிடம் அதிகமான அளவில் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு அவருக்கு உதவுவது போல் நடித்து முதலில் நட்பாக பழகிய மகேஷ், அதன்பிறகு அவரை காதல் வலையில் வீழ்த்தினார்.

இதனை அடுத்து இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டாக்டர் சோனாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்த மகேஷ், ஒரு கட்டத்தில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில் பணத்தை டாக்டர் சோனா திருப்பி கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி சோனாவை கத்தியால் குத்திவிட்டு மகேஷ் தலைமறைவாகிவிட்டார். ஆபத்தான நிலையில் இருந்த சோனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது, டாக்டர் சோனா தன்னுடன் லிவிங் டுகெதராக இருந்த மகேஷ் தான் தன்னை கத்தியால் குத்தியது என அடையாளம் காட்டிவிட்டு சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

தோசை இட்லி ஏற்ற சுவையான வடகறி

nathan

கீழாநெல்லி தினமும் சாப்பிடலாமா

nathan

பிரபல ஹாலிவுட் நடிகர் தனது 2 மகள்களுடன் விமான விபத்தில்

nathan

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்

nathan

கருங்காலி மாலை யார் அணியலாம்?

nathan

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்!

nathan

சந்திரமுகி 2 படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது

nathan

வரலட்சுமிக்கு கல்யாணம்.. ஆர்யா முதல்.. சித்தார்த் வரை..

nathan

நடிகை காயத்ரி யுவராஜின் மகள் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

nathan