30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்

1469631c-8375-4fc6-97a0-d8d77543b7be_S_secvpfநீண்ட கூந்தலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அதுவும் பெண்கள் கூந்தலை உதிராமல் பாதுகாக்க அதிக முயற்சிகள் செய்து பாதுகாப்பர். முடியை பாதுகாக்கும் சில எண்ணெய் வகைகளும் அதன் பயன்களையும் அறிந்துகொள்வோம்.
* நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.* செம்பருத்தி எண்ணெய் முடியின் நிறத்தையும் தரத்தையும் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கும். மேலும் நரை முடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எண்ணெய் ஒரு சிறந்த பலனைத் தரக்கூடியது.

* இந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

* பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.

* மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்க வேண்டுமெனில், அதற்கு மருதாணி எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

* பொதுவாக யூகலிப்டஸ் எண்ணெயை உடல் மசாஜிற்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், பொடுகு வராமல் தடுப்பதோடு, மற்ற ஸ்கால்ப் பிரச்சனைகளும் நீங்கும்.

* பெரும்பாலான இந்திய கிராமங்களில் இன்றும் நல்லெண்ணெயைத் தான் முடிக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே தான் கிராம மக்களின் முடி மிகவும் நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையுடனும் இருக்கிறது. ஏனெனில் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால், மயிர்க்கால்கள் நன்கு சுவாசிப்பதோடு, மயிர்த்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

* கடுகு எண்ணெயைக் கொண்டு, தலை மற்றும் உடலுக்கு மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் தலை மற்றும் உடலில் சீராக இருப்பதோடு, முடியும் நன்கு புத்துணர்ச்சியுடன் நீளமாகவும், கருமையாகவும் வளரும்.

* விளக்கெண்ணெய் அடத்தியாக இருக்கும். அத்தகைய எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால், முடியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து முடிக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கும். ஆயுர்வேத எண்ணெயான பிரமி எண்ணெய் முடி மற்றும் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது. அதிலும் இதனைக் கொண்டு, தலைக்கு மசாஜ் செய்தால், மயிர்க்கால்கள் வலுவோடும், ஸ்கால்ப்பானது குளிர்ச்சியுடனும் இருக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது.

Related posts

ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க சூப்பர் டிப்ஸ்!

nathan

செம்பருத்தி எண்ணெய் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

nathan

எலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க? அப்ப இத செய்யுங்க ….

nathan

பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சூப்பர் டிப்ஸ் !

nathan

முடி எப்பவும் வறட்சியா இருக்க?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறையில் பொடுகை எளிதாக போக்குவது எப்படி..?அப்ப இத படிங்க!

nathan

முடியை நன்கு அழகுபடுத்த இதை பயன்படுத்திப்பாருங்கள் அதிசயிக்க தக்க பலனை காணலாம்….

sangika

கூந்தலுக்கு வளர்ச்சியை தூண்டும் பழங்கள்

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் ?

nathan