25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
625.500.560.350.160.300.053. 11
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தோல்நோயை குணப்படுத்தும் கஸ்தூரி மஞ்சள்!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகம் இருக்கும். தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு கிடைக்கும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வரவே வராது.

கஸ்தூரி மஞ்சள் எனப்படுவது காய்ந்த கிழங்குகளே ஆகும். கத்தூரி மஞ்சள் என்றும் கூறப்படும். கஸ்தூரி மஞ்சள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டுள்ளது.

கஸ்தூரி மஞ்சள் பெரும்பாலும், வெளி உபயோகத்திற்கான மருந்தாகப் பயன்படும். அரைத்துப் பசையாக்கி தேய்த்துக் குளிக்க கரப்பான், கிருமிநோய்கள் போன்றவற்றைப் போக்கும். தோல் பளபளப்பாக்கும்.

புண்ணுங் கரப்பானும் போகாக் கிருமிகளும்…. கஸ்தூரி மஞ்சளுக்குக் காண் என்கிறது அகத்தியர் குணபாடம். மேலும், தொடர்ந்து உபயோகித்துவர, அறிவையும் ஆண்மைத் தன்மையையும் ஆற்றலையும் மிகுதியாக்கும்.

கஸ்தூரி மஞ்சள் மலைப் பகுதிகளில் இயல்பாக வளர்ந்தாலும் இதன் மருத்துவ மற்றும் வாசனை பண்புக்காக பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. செடியின் கிழங்குகள் காய வைக்கப்பட்டு மணமுள்ள கஸ்தூரி மஞ்சளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

கஸ்தூரி மங்சளின் மருத்துவ குணங்கள்

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுத்து இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை சரியாகும்.
பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கி விடும்.
கரப்பான் புண்கள் விரைவில் சரியாகும்.
கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.
கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும்.
முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்ய வேண்டும்.
அழகு, நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள், வாசனைப் பொருட்கள், சோப்புகள், தைலங்கள் ஆகியவை தயாரிக்கப்படுவதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றன.
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்கலாம்.
கஸ்தூரி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, அப்போது ஏற்படும் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க காசநோயின் போது ஏற்படும் இரைப்பு கட்டுப்படுத்தும்.
கஸ்தூரி மஞ்சளை தூள் செய்து 100 முதல் 250 மிகி வரை வெந்நீரில் சாப்பிட்டு வர சொறி சிரங்கு சரிசெய்யும்.
½ லிட்டர் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகக் பூசி வர உடல் வலி தீர்ந்து விடும்.

Related posts

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில்

nathan

கிட்னி ஸ்டோன் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கூடவே வலியையும் அதிகமாக கொண்டிருப்பார்கள். இந்த வலி குறைக்கும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்….

nathan

தலைசுற்றலை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

Healthy tips.. தொண்டைப்புண், தொண்டை வலிக்கு முக்கிய தீர்வு.

nathan

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை எல்லாம் சாப்பிட கூடாதுனு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

கண்ணை மூடுனதுமே தூங்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா பற்கள் வெண்மையாக பளிச்சிட இவை மட்டும் போதும்…

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வர நேரிடும்

nathan

குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதை எப்படி அறிவது?

nathan