29.6 C
Chennai
Thursday, May 22, 2025
14 13974
Other News

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளியில் நடைபெறவில்லையா?

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலம் மூன்று நாட்களிலிருந்து ஏழு நாட்கள் வரை வரும். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் செயலாகும். பல ஆண்டுகள் இதை தொடர்ந்து அனுபவிக்கும் பெண்கள் தங்களது உடலின் தன்மை பற்றி அறிந்து நடந்து கொள்கின்றனர். சில பேர் தங்களுக்கு எந்த நேரத்தில் மாதவிடாய் வரும் என்று நன்கு அறிந்திருப்பார்கள்.

அதே போல, இந்த சமயத்தில் எவ்வளவு இரத்தம் வருகின்றது என்பது ஒவ்வொறு பெண்ணின் உடலை சார்ந்தது. ஒரு வேளை அதிக இரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது சுத்தமாக இல்லாதது போன்று இருக்கலாம். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் ஏறக்குறைய 12 டீஸ்பூன் இரத்தத்தை ஒவ்வொரு மாதமும் இழக்க நேருகின்றது. இது மற்றவர்களுக்கு குறைந்தது 4 டீஸ்பூன் ஆக உள்ளது.

சரியான இடைவெளி

ஒவ்வொரு மாதமும் உதிரப் போக்கு வரும் போது உங்கள் உடல் அதற்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது. இப்படி சரியான நேரத்தில் வரும் மாதவிடாய் வருவது நடக்காவிட்டாலோ அல்லது ஒவ்வொரு மாதமும் வருவதை போல் சீராக வரா விட்டாலோ அது அசாதாரணமான விஷயமாகும்.

எல்லா பெண்களும் ஒரு காலத்தில் அசாதாரண உதிரப் பொக்கை சந்திக்க நேரும். இது பெரும் பயத்தை தரும் விஷயம் அல்ல. ஆனால் இதன் காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கான காரணங்கள் பற்றிய குறிப்புகள் சில இங்கு உள்ளன.

கருவுறுதல்

கருவுறும் போது பெண்களில் சுரக்கும் பால் சுரப்பிகள் மாதவிடாயை நிறுத்தச் செய்கின்றன. சில சமயங்களில் இது நிற்பதற்கு முன் முன்பை விட குறைவாகவோ அல்லது கால தாமதாகவோ வரக்கூடும். நீங்கள் கருவுற்றிருக்கின்றீர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் நேர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

மன அழுத்தம்

அசாதாரண உதிரப் போக்கிற்கு முக்கிய காரணம் மன அழுத்தமாகும். கார்டிசோல் என்ற சுரப்பி இதன் மேல் நேரடியாக தாக்கம் செய்கிறது. இந்த சுரப்பி ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரோஜிஸ்டிரான் ஆகிய சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது. அதிக அளவு கார்டிசோல் இரத்தத்தில் கலந்திருப்பது உங்கள் இரத்தப் போக்கின் சுழற்சியை மாற்றுகின்றது.

உணவு முறை

மற்றொரு காரணமாக இருப்பது உணவு முறையும் உங்கள் உடல் எடையுமாகும். அதிக அளவு கார்போஹைடிரேட் உள்ள உணவுகளை உண்டு உடல் எடையை உயர்த்தியவர்களுக்கு முட்டை வரும் காலம் மாறலாம். இது சுரப்பிகளின் வேறுபாடினால் ஏற்படுகின்றது. ஒரு வெளை எடை குறைவாக இருந்தாலும் இதுவே காரணமாக இருக்கும்.

உடற்பயிற்சி

மாதவிடாய் காலத்தில் உடலுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுகிறது. அதிக அளவு சக்தியை நீங்கள் உடற்பயிற்சியில் செலவு செய்தால் பின் இந்த காலத்தில் உடலில் தாங்கும் சக்தி இருக்காது.

கருவுறுதலை தடுக்கும் மாத்திரைகள்

இத்தகைய அதிக அளவை கொண்ட கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றின் நச்சுத்தன்மை சுரப்பிகளை கட்டுப்படுத்தி மாதவிடாயை சரியாக வரவிடாமல் தடுக்கிறது.

அதிக மதுபானம்

உடலின் கலலீரல் ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றத்தினால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய சுரப்பிகள் மாதவிடாயை வரவழைக்கின்றன. அதிக அளவு மது அருந்துவதால், உடலின் கல்லீரல் பழுதடைகிறது. இதனால் மாதவிடாய் காலம் மாறுபட்டு அல்லது சரியாக வராமல் இருக்க நேரிடுகிறது.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்

கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுவது பொதுவாக ஏற்படும் நோயாகும். இது நிறைய பெண்களுக்கு உண்டு. இது ஒவ்வொரு மாதமும் வரும் முட்டை உற்பத்தியை தடை செய்கிறது அல்லது குறைக்கிறது. முடி வளர்ச்சி, பொடுகுத் தொல்லை மற்றும் குழந்தையின்மை ஆகியவை கட்டிகள் இருப்பதற்கான மற்ற அறிகுறிகளாகும். இதனால் இன்டோமெட்ரோசிஸ், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகிய நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இறுதி மாதவிடாய்

கர்ப்ப காலத்தில் மாதவிடாய் வராமல் இருப்பது போன்று, முழுமையாகவே இது வராமல் நின்று விடுவது தான் மெனோபாஸ் அல்லது இறுதி மாதவிடாய் என்று கூறுவார்கள். உடலின் சுரப்பிகளின் மாற்றங்கள் காரணமாக இது நடைபெறுகிறது. அசாதாரண உதிரப் போக்கு மெனோபாஸ்சின் 10 ஆண்டிற்கு முன்பே தெடங்கிவிடும். (அதாவது 40 வயது மதல் 50 வயது வரை உள்ள பெண்களிடம் நாம் இதை காண முடியும்)

அசாதாரண உதிரப் போக்கிற்கான சிகிச்சை

மேற்கூறிய காரணங்களில் எந்த காரணத்தால் இத்தகைய அசாதாரண நிலை ஏற்படுகின்றது என்பதை நாம் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கண்டறிய வேண்டும். இதற்கு சிகிச்சை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவருடன் கலந்தாய்வது நல்லது. உங்கள் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளையும் சிகிச்சை முறையையும், சுரப்பிகளை சரி செய்யும் மற்றும் இணையான மருந்துகளையும் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் சுரப்பிகளின் அளவு சரியானதாகவும் மாதவிடாயை சரியான சமயத்தில் வரவழைக்கவும் முடியும். மருந்து மட்டுமில்லாமல் மன அழுத்தத்தை குறைக்கும் காரியங்களில் ஈடுபடுதல், உணவுகளில் மாற்றங்கள் செய்தல் மற்றும் உடற்பயிற்சி ஆகிய காரியங்களை செய்தால் போதும். நிச்சயம் இதிலிருந்து விடுபட முடியும்.

Related posts

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan

மரண படுக்கையில் மனைவி- முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு;

nathan

YOUTUBER இர்பானின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் மீண்டும் வைரல்

nathan

ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்..விவாகரத்து கொடு..

nathan

கமலை எச்சரித்த வனிதா! நடந்தது என்ன?

nathan

ரூ.1,400 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கும் முத்தையா முரளிதரன்!

nathan

கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

காதலை ஒத்துக்கொண்ட தர்ஷன்; – அப்போ இவரா?

nathan

மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

nathan