25.5 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மருத்துவ குறிப்பு

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

ca36426b f387 4b25 818d f4b8d85598e8 S secvpf
சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.

இந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும். வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. இதற்கும் இதே சப்ஜா விதை தான்.

இந்த சப்ஜா விதை – தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது! தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான – ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.

அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்! சில சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!

கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெற்றிலையில் வச்சுத் சாப்பிட்டாலும், சீக்கிரம் மாதவிலக்கு வந்து விடும். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.

Related posts

உங்க மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கான சில இயற்கை நிவாரணிகள்!

nathan

நாட்டு மருந்துக் கடை – 9 ~ பெட்டகம்

nathan

லதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்… (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை…

nathan

பீனசத்திர்க்கான சித்த மருந்துகள்

nathan

இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்

nathan

அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்!

nathan

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் குழந்தைக்கு இந்த நோய் வருமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan