31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
சூப் வகைகள்

ஸ்பைசி சிக்கன் சூப்

fca3cb60 ddf2 4f66 b037 2436b208a729 S secvpf
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 250 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
சோம்பு – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கரம் மசாலாப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகுப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

• சிக்கனை கழுவி சிறு சிறு துண்டுகளாக எலும்பில்லாமல் நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கடைசியாக சிக்கனையும் போட்டு வதக்கவும்.

• பின் அதில் கரம் மசாலாப் பொடி, மிளகுப்பொடி, உப்பு போட்டு 4 முதல் 5 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

• நன்கு வெந்ததும் திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Related posts

பிடிகருணை சூப்

nathan

கொத்தமல்லித்தழை சூப்

nathan

தக்காளி சூப்

nathan

சத்து நிறைந்த காய்கறி சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்

nathan

சத்தான சுவையான பீட்ரூட் சூப்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ராக்கோலி சூப்

nathan

பாப்கார்ன் சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan