25.2 C
Chennai
Monday, Nov 25, 2024
6 159445
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா உள்ளாடை அணியும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள்?

நாம் அனைவரும் வெளிதோற்றத்திற்கு ஆதாவது ஆடைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ? அந்த முக்கியத்துவத்தை உள்ளாடைகளை கொடுப்பதில்லை. புதிய ஆடைகளை, அழகான மற்றும் விலையுர்ந்த ஆடைகளை அணிய விரும்புகிறோம். அதேநேரத்தில் உள்ளாடைகளை ஏதொன்றுபோல், வாங்கி அணிகிறோம். உள்ளாடை உற்பத்தியாளரால் 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 45 சதவீதம் பேர் ஒரே உள்ளாடைகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு அணிவது கண்டறியப்பட்டது.

 

உண்மையில், பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாடைகளை மாற்றாமல் அணிந்திருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது. இந்த பழக்கம் பாதிப்பில்லாதது என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் அது அப்படி இல்லை என்று உங்களுக்குச் சொல்வோம். உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உள்ளாடை தவறுகளின் பட்டியலை இக்கட்டுரையில் காணலாம்.

பருத்தி துணி

பருத்தி துணியால் செய்யப்பட்ட உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அவ்வாறு இல்லையென்றால், உங்கள் உள்ளாடையின் மைய துணி குறைந்தபட்சம் பருத்தியாக இருக்க வேண்டும். ஏனெனில் பருத்தி துணி ஈரப்பதத்தை குறைக்கும் திறன் கொண்டது. இதனால், பருத்தி உள்ளாடைகளை அணியும் பெண்களுக்கு யோனி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

 

தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பிறப்புறுப்பு பகுதியில் பருத்தி துணி இல்லாத உள்ளாடைகளை அணிவது ஈஸ்ட் தொற்றுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. பாலியஸ்டர் மற்றும் செயற்கை போன்ற துணிகள் உங்கள் யோனி ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இந்த துணிகள் நீர் உறிஞ்சக்கூடியவை அல்ல. ஆதலால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய் கிருமிகளை பெருக்க ஒரு சூழலை உருவாக்குகின்றன.

சிறிய அளவு உள்ளாடை

உங்கள் அளவை விட சிறியதாக உள்ளாடைகளை அணிவது உங்கள் அந்தரங்க பகுதியில் வியர்வை ஏற்படுத்தும் மற்றும் சூடாக மாற்றும். இது எரிச்சலையும், யோனி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. இறுக்கமான உள்ளாடைகள் வல்வோடினியா எனப்படும் வலிமிகுந்த நிலையின் அறிகுறிகளைத் தூண்டும். எனவே, எப்போதும் உங்களுக்கு சரியாக பொருந்தக்கூடிய உள்ளாடைகளைத் தேர்ந்தெடுங்கள். மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வான ஆடைகளையோ அணியக்கூடாது.

வாசனை சலவை

உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. இதனால், நீங்கள் சலவை படுத்த பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்களால் எளிதில் எரிச்சல் அடையலாம். சலவை படுத்த பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் எரிச்சலையும் எரிவையும் ஏற்படுத்தும். சில பெண்கள் மற்றவர்களை விட அதிக உணர்திறன் உடையவர்கள், அவர்களுக்கு அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உள்ளாடைகளை கழுவுவதற்கு வாசனை சலவையை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

மிகவும் மெலிதான உள்ளாடை அணிவது

காணக்கூடிய பேன்டி கோடுகளிலிருந்து மிகவும் மெலிதான உள்ளாடைகள் உங்களை காப்பாற்றுகிறது. ஆனால் இது பாக்டீரியாவிற்கு பின்னால் இருந்து முன்னால் பயணிக்க ஒரு நேரடி வழியையும் வழங்குகிறது. இது தொற்றுநோயைப் பிடிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. பல தாங்ஸ் லேசி, பட்டு மற்றும் பாலியஸ்டர் துணிகளில் வருகின்றன. இது இன்னும் உங்களுக்கு சங்கடமாக இருக்கும். ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்காக உங்கள் தாங்ஸை அணியுங்கள். சாதாரண நாட்களில் 100 சதவீத பருத்தி உள்ளாடைகளை அணிய விரும்புங்கள்.

இறுதி குறிப்பு

உங்கள் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். அதேசமயம் உங்கள் பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். இதில், நீங்கள் அணியும் உள்ளாடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் அறியாமல் செய்யும் சிறிய தவறு, உங்களை யோனி தொற்றுநோய்க்களுக்கு ஆளாக்கும். ஆதலால், உங்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

Related posts

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சருக்கான அறிகுறிகள்!!!

nathan

சிப்பிக் காளான் வளர்ப்பு

nathan

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? கட்டாயம் இத படிங்க!

sangika

பெண்ணுறுப்பில் மட்டும் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

உங்கள் குழந்தை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்னவென்று தெரியுமா?

nathan

டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம் – செய்முறை மற்றும் பயன்கள்!!

nathan

உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளதா? மேலும் இந்த பானங்களை அடிக்கடி குடியுங்கள்…

nathan

உடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…நுரையீரலில் தங்கியிருக்கும் நாள்பட்ட சளியை வெளியேற்றணுமா?

nathan