முந்தைய காலத்தில் உணவுகள் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டு சாப்பிடப்பட்டது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில், நாம் மிகவும் பிஸியாக இருப்பதால், அதே மாதிரியான வாழ்க்கை முறையை அனுபவிக்கவோ அல்லது பின்பற்றவோ முடிவதில்லை. அலுவலகத்தில் உள்ள அதிகப்படியான வேலைப்பளுவால் ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிப்பது சாத்தியமாகாத ஒன்றாக உள்ளது. ஆனால் இன்று வரை எக்காரணம் கொண்டும் தவறாமல் அனைவரும் பின்பற்றி வரும் ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்றால் அது குளிப்பது.
துரதிர்ஷ்டவசமாக, சிலர் தவறான நேரத்தில், அதாவது தினமும் உணவு உட்கொண்ட பிறகு குளிக்கிறார்கள். நீங்கள் சமீப காலமாக எக்காரணம் கொண்டும் மிகவும் சோர்வாகவும், மந்தாகவும் உணர்கிறீர்கள் என்றால், அதற்கு உங்களின் குளியல் பழக்கம் காரணமாக இருக்கலாம். இக்கட்டுரையில் ஏன் உணவு உட்கொண்ட பிறகு குளிக்கக்கூடாது, அப்படி குளித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து ஆயுர்வேதமும் அறிவியலும் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஏன் உணவு உண்டதும் குளிப்பது நல்லதல்ல?
சாப்பிட்டதும் குளிப்பது என்பது ஒரு மோசமான ஐடியா. ஏனெனில் இது இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இல்லாத போது, செரிமானம் தாமதமாக நடைபெறுகிறது. அப்படியிருக்க, உணவு உட்கொண்டதும் அந்த உணவு செரிக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்ட அந்த உணவு குடலில் அப்படியே நொதிக்க அல்லது அழுக ஆரம்பித்து, உங்களை மிகவும் சோர்வாக, மந்தமாக உணரச் செய்வதுடன், மலச்சிக்கல் மற்றும் சில சமயங்களில் குமட்டல் பிரச்சனையையும் சந்திக்க வைக்கும்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதத்தின் படி, உடலில் உள்ள நெருப்பு உறுப்பு தான் உணவுக்கு பிந்தைய செரிமானத்திற்கு காரணமாகும். நீங்கள் சாப்பிட்டதும் உடனே குளிக்கும் போது, செரிமானம் நடக்க உதவ வேண்டிய ஆற்றல் அல்லது நெருப்பு, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க திருப்பிவிடப்படுகிறது. இந்த காரணத்தினால் தான், பண்டைய மருத்துவ முறை உணவு உட்கொண்ட பிறகு குறைந்தது 2 மணிநேரத்திற்கு குளிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறது.
உடலின் இயற்கை சுழற்சியில் இடையூறு உண்டாக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது, உடலில் நோய்கள், அசௌகரியங்கள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே தான் ஆயுர்வேதமும் குளியலுக்கு பின் குளிப்பது நல்லதல்ல என்று கூறுகிறது.
அறிவியல் செல்வது என்ன?
நவீன ஆய்வுகள் எதுவும் இந்த கூற்றை ஆதரிக்கவில்லை என்றாலும், ஒரு கோட்பாடு உள்ளது. அது என்னவெனில், உணவு உட்கொள்ள அமர்ந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மற்ற உறுப்புக்களின் செயல்பாடும் அதிகரிக்கும். உணவு உண்டதும் குளிக்கும் போது, உடலின் இயற்கை செயல்பாடு பலவீனமடைகிறது மற்றும் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க உடல் சற்று கூடுதல் கவனமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனெனில் உடலின் வெளிப்புறத்தை நீங்கள் குளிப்பதன் மூலம் குளிர்விக்கிறீர்கள். இதன் விளைவாக உண்ட உணவை செரிமானமடையச் செய்ய செலவழிக்க வேண்டிய ஆற்றல், உடல் வெப்பநிலையைப் பராமரிக்க திருப்பிவிடப் படுகிறது. இதனால் செரிமான செயல்பாடு தாமதமாகி, ஒருவித அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது.
எவ்வளவு நேரம் கழித்து குளிக்கலாம்?
நவீன அறிவியல் மற்றும் பழங்கால நம்பிக்கைகளின் படி, ஒரு உணவு உட்கொண்ட பின்பு குறைந்தது 35 நிமிடம் கழித்து குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதமோ குறைந்தது 2 மணிநேரம் கழித்து குளிக்க அறிவுறுத்துகிறது. உங்களின் வளர்சிதை மாற்றம் அல்லது உங்கள் செரிமானம் எவ்வளவு விரைவாக செயல்படுகிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், 2 மணிநேரம் கழித்து குளிப்பதே நல்லது. லேசான உணவை உட்கொள்வது செரிமானத்தை மென்மையாக நடைபெறச் செய்யும்.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு பின்பற்ற வேண்டியவை:
* உணவின் போது பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் மற்றும் உணவு உண்டதும் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை செரிமானத்தைப் பாதிக்கும் விஷயங்களாகும்.
* உணவு உட்கொண்ட பின்பு தான் குளிக்கக்கூடாதே தவிர, உணவு சாப்பிட அமரும் முன் குளிக்கலாம். இது உடலின் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, செரிமானத்தை வேகப்படுத்தும் என்பதால், இந்த வழியை வேண்டுமானால் பின்பற்றலாம்.
முடிவு
சாப்பிட்ட பிறகு குளிப்பது என்பது நம்மில் பெரும்பாலானோர் செய்யும் ஒன்று. இது ஒரு சாதாரண விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லை. நீங்கள் காரணமின்றி திடீரென்று மிகவும் சோம்பலாகவும், மலச்சிக்கல் பிரச்சனை அல்லது தூங்குவதில் சிரமத்தை சந்தித்தால், இப்போது ஏன் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இனிமேல் செரிமானத்திற்கு இடையூறை விளைவிக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவரை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேப் போல் சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் மற்றும் சாப்பிட்ட உணவை சரியாக ஜீரணிக்க வயிற்றிற்கு நேரம் கொடுங்கள். இவற்றையெல்லாம் ஒருவர் மேற்கொண்டு வந்தால், உங்கள் முகம் அழகாவதையும், மலச்சிக்கல் நீங்குவதையும், நன்றாக இருப்பதையும் உணர்வீர்கள்.