26 14117275
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருமுட்டை வெளிப்படுவதற்கான 5 அறிகுறிகள்!!!

கர்ப்பமாவதற்கு கருமுட்டை வெளிப்படுதலைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு கருமுட்டை வெளிப்படும் போது உறவில் ஈடுபடுவது சிறந்த நேரமாகும். கருமுட்டை வெளிப்படுவதற்கான 5 அறிகுறிகள் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாயை கடக்கும் போதும் இதனை உணர்வது இயல்பு தான்.

கருப்பை முட்டையை வெளியிடும் போது தான் கருமுட்டை வெளிப்படுதல் நடைபெறும். இது பெண்களின் கருமுட்டை குழாயில் இருந்து வெளிவரும். கருவுறுவதற்கு இந்த முட்டை தயாராக இருக்கும். ஒரு வேளை கருவுறவில்லை என்றால், மாதவிடாயின் போது, கருப்பை அந்த முட்டையை உறிஞ்சி வெளியேற்றப்பட்டிருக்கும்.

குறிப்பு: நீங்கள் கருமுட்டையை வெளிப்படுத்தவில்லை என்றால், உங்கள் கர்ப்பப்பை வாயின் சளி பிசுபிசுப்பாக, க்ரீமியாக அல்லது முழுமையாக இல்லாமலேயே போய்விடும். நீங்கள் கருமுட்டையை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டால், கர்ப்பப்பை வாயின் சளி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் கர்ப்பமாவது மிகவும் நல்லது.

கருமுட்டை வெளிப்படுவதற்கான சில அறிகுறிகள், இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பப்பை வாய் நிலை மாறுதல்
கர்ப்பப்பை வாய் நிலை மாறுதல்
கருவுறும் தன்மை உங்களுக்கு உச்சத்தில் இருக்கும் போது கருப்பை வாய் உயர்ந்து, மென்மையாக மற்றும் அதிகமாக திறந்திருக்கும். கருமுட்டை வெளிப்படுவதற்கான அறிகுறியில் இதுவும் ஒன்றாகும்.

உடலுறவில் ஈடுபாடு
உடலுறவில் ஈடுபாடு
கருவுறும் தன்மை உச்சத்தில் இருக்கும் போது பெண்களுக்கு உடலுறவின் மீது அதிக நாட்டம் ஏற்படும். கருமுட்டை வெளிப்படுவதற்கான ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே அவர்களின் பாலுணர்ச்சியில் உந்துதல் ஏற்படும். இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால் கண்டிப்பாக கர்ப்பமடையலாம்.

உடல் வெப்பநிலை
உங்கள் உடலின் அடித்தள வெப்பநிலை தான் உங்கள் உடலின் வெப்ப நிலையாகும். வெப்பநிலை சற்று உயர்ந்து, அது அப்படியே நீடித்து இருந்தால், கருமுட்டை வெளிப்படுவதற்கான அறிகுறியாகும். மேலும் கருமுட்டை வெளிப்பட்ட பின்பும் இது நீடிக்கும்.

மார்பகங்கள் மென்மையாக இருக்கும்
கருமுட்டை வெளிப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ சில பெண்கள் தங்கள் மார்பகங்கள் மென்மையாக இருப்பதை உணர்வார்கள். அதற்கு காரணம், இந்நேரத்தில் ஹார்மோன்கள் உடலில் பாய்ந்து ஓடும். கர்ப்பமாவதற்கு உங்களை தயார் படுத்துவதற்காக நடைபெறும் செயல் இது.

அளவுக்கு அதிகமான வெள்ளைப்படிதல்
அளவுக்கு அதிகமான வெள்ளைப்படிதலும் கூட கருமுட்டை வெளிப்படுவதற்கான அறிகுறியாகும். கருமுட்டை வெளிப்படுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் உடலில் உற்பத்தி திறன் மிக்க சளி அதிகமாக உற்பத்தியாகும்.

Related posts

சிக்கனமாக பணம் சேமிக்கும் வழிமுறைகள்

nathan

இதயத்தில் ஓட்டை என்பது சரியா?

nathan

உங்கள் தோல்விக்கு மற்றவர் மீது பழி போட வேண்டாமே

nathan

கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வேப்ப எண்ணெயில் இவ்வளவு பலன் இருக்கா?

nathan

உடல் நலம் காக்கும் வெற்றிலை மூலிகை

nathan

புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து மாதுளை !

nathan

பிரச்சினைகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவை

nathan