36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

கவலைய விடுங்க ! மூட்டை பூச்சி தொல்லையால் அவஸ்த்தை படுகிறீர்களா .?

ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி, வண்டு போன்ற அனைத்து பூச்சிகளும் நம் வீட்டில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.படுக்கை அறையில் அதிகமாக தொல்லை கொடுக்கும் மூட்டைப் பூச்சிகளை அழிக்க டிப்ஸ் இதோ,

மூட்டை பூச்சிகளை அழிப்பது எப்படி?மூட்டை பூச்சிகளுக்கு புதினா இலைகளின் வாசனை என்றாலே ஆகாது. எனவே நாம் உறங்கும் அறையில் புதினா இலைகளை எடுத்து அருகில் வைத்துக் கொள்ளலாம்.மூட்டைப் பூச்சிகள் மறைந்திருக்கும் இடத்தில் சிவப்பு மிளகாய் பொடியை தூவினால் போதும். தொல்லை கொடுக்கும் மூட்டைப்பூச்சிகள் அழிந்துவிடும்.லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி நறுமணம் உள்ள இடங்களில் மூட்டைப்பூச்சிகள் வராது. எனவே அதனை ஒழிக்க, லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி ஸ்ப்ரேவை பயன்படுத்தலாம்.யூகலிப்டஸ் எண்ணெய்யுடன், சிறிதளவு ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை கலந்து, அதை நாம் உறங்கும் இடத்தில் தெளிக்க வேண்டும்.

பீன்ஸ் இலைகள் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இலைகளில் படுக்கை அறையில் வைத்துக் கொள்ளலாம்.கருப்பு வால்நட் மரத்தின் தேநீர் பைகளை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைத்து விட்டால், வீட்டில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லைகளே இருக்காது.

வேப்ப எண்ணெய்யை நீர்த்து போக செய்யாமல் அதன் தூய்மையான வடிவத்திலேயே வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.ரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லியில் அதிகமாக பயன்படும் வசம்பு பொடியை நீருடன் கலந்து, அதை வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதனால் மூட்டைப்பூச்சிகள் முழுமையாக அழிந்துவிடும்.

Related posts

ஒழுங்கற்ற மாதவிடாய் என்னென்ன பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்?

nathan

உங்க குழந்தைக்கு சளி, இருமல், காய்ச்சலா? அப்ப உடனே இத படிங்க…

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ப்ப கால நீரிழிவு பற்றி உண்மைகள்?

nathan

தேங்காய்ப் பாலின் மகத்துவம்!

nathan

பாதிப்புக்கள் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

nathan

அவசியம் படிக்க..இரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்

nathan

விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது

nathan

இதோ எளிய நிவாரணம்! மூட்டு வலி பிரச்சனையில் இருந்து தீர்வு காண இத முயற்சி பண்ணுங்க!!!

nathan