28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அழகு குறிப்புகள்

சுடிதார் ஸ்பெஷல்

online1-300x157

பெண்கள் என்றாலே, அழகுதான். அந்த அழகை மேம்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தரமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆர்வக் காட்டி வருகிறார்கள். அதிலும், இன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும், துணிவகைகள் என்றால் தனி இடம் தான்.

பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

காரணம். ஒரு “function”-க்கு செல்லும்போது என்னதான் நகைகளும், மேக்கப்பும் போட்டு இருந்தாலும், அவர்கள் முதலில் கவனிப்பது நம்முடைய உடைகளைத்தான். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

ஆகவே, மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய உடைகள் தான். எனவே, அத்தகைய உடைகளை தேர்ந்தெடுக்க நாம் செலவழிப்பது தவறேதுமில்லை. ஆனால், நாம் தேர்ந்தெடுக்கும் துணி வகைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தான் கவனம் தேவை.

ஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்பமாட்டார்கள். தான் உடுத்தும் உடைகள் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால், நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர், அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும்.

இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. டிசைன் என்பது அப்பாற்பட்ட விஷயம். முதலில், நாம் எடுக்கும் துணி கலர், நம்முடைய நிறத்திற்கு ஒத்துவருமா? என்று பாருங்கள். அதைவிட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்னதான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை “டல்லாக” தான் காட்டும். எனவே, அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நான் சில “டிப்ஸ்” களை கூறுகிறேன். கேளுங்கள்.

1.முதலில், கருப்பு நிறமாக உள்ளவர்கள் “லைட்” நிறத்தில் உள்ள “ஸ்டோன்” வேலைப்பாடுகள் செய்த துணிகளை தேர்ந்த்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கபடும் நிறம்: லைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள எல்லோ கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயிட்&ஏதாவது காமினேஷன் கலர் இதுமாதிரி “லைட்” நிறத்தில் உள்ள துணிகளை தேர்வு செய்யுங்கள்.

2.கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளு, பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட்&ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம்.

3.கலராக உள்ளவர்களுக்கு “டார்க்” கலரில் எந்த நிறவகையான துணிகளை போட்டாலும், அழகாக தெரியும்.

4.பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற்போல் துணிகளை எடுக்க வேண்டும்.

5.உதாரணத்திற்கு, குண்டாக உள்ளவர்கள் காட்டன் துணிகளை அணிந்தால், அது மேலும், அவர்களை குண்டாகத்தான் காட்டும். அதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும்.

6.ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலைபாடுகள் செய்த காட்டன் அல்லது “சில்க் காட்டன்” துணிகளை தேர்வு செய்யலாம். அது அவர்களை சற்று குண்டாக காட்டும்.

7.அதுமட்டுமல்லாமல் இப்போது “சம்மர்” தொடங்கி விட்டது. எனவே இத்தைகைய நேரத்தில், சிந்தடிக் வகைகளையும், ஜீன்ஸ் மற்றும் அதிக வேலைப்பாடுகள் உள்ள துணிகளை உபயோகிக்க வேண்டாம்.

8.முடிந்தவரையில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காட்டன் அல்லது “சில்க் காட்டன்” வகைகளியே உபயோகிக்கவும். அதனால் எரிச்சல் வராது, உங்களுக்கும் டென்ஷன் ஆகாது.

9.அதுமட்டுமல்ல, என்னதான் துணிவகைகளை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது.

10.முடிந்தவரையில், சுடிதார்களை “அம்பர்லா” மாடலில் தைத்தால், பார்ப்பது அழகாகவும், பூக்கள் விரிந்திருக்கும் போன்றும் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்.

11. நாம் எடுக்கும் துணியில் நாம் அழகாக தெரிய, தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.

அதுமட்டுமல்ல, காட்டன்(or) “சில்க் காட்டன்” உபயோகிப்பதால், தோல் பாதுகாக்கப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து நம்முடைய நிறத்தையும் காக்கிறது. முடிந்தவரையில்,”Full Hand”வைத்தே துணிகளை தையுங்கள். அது பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், வெயிலில் இருந்து நம்முடைய கைகளை காக்கிறது.

எனவே, துணிகளை தேர்வு செய்யுபோது, அவரவர் நிறத்திற்கும், உடல்வாகுக்கும் தகுந்தாற்போல் தேர்வு செய்ய வேண்டும். கூடுமானவரையில், துணிகளில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.

இப்போது “சம்மர் ஸ்பெஷல்” க்காகவே நிறைய “காட்டன்” அல்லது “சில்க் காட்டன்” துணிகளை விற்பனை செய்கிறார்கள். எனவே அதை வாங்கி அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். வெயிலில் இருந்து தங்களுடைய சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்

Related posts

‘உடல் எடையைக் குறைக்கிறேன்’ என்று பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது…

nathan

ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..

nathan

நீங்களே பாருங்க.! மாஸ்டர் நடிகையின் மீண்டும் அந்த மாதிரி போட்டோஷுட்

nathan

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan

முகத்திற்கான பயிற்சி

nathan

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

nathan

அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் ஹோட்டலில் தங்கிய மாணவன்!

nathan

உள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு!

sangika

அழகு

nathan