அறுசுவைசெட்டிநாட்டுச் சமையல்

செட்டி நாட்டு புளியோதரை

gongura-pulihoraபுளிக் காய்ச்சலுக்கு:
வரமிளகாய்        & 12
மல்லி விதை        & 3 ஸ்பூன்
வெந்தயம்            &  © ஸ்பூன்
பெருங்காயம்        & ஒரு சிறிய துண்டு
விரலி மஞ்சள்        & ஒரு துண்டு
அல்லது
மஞ்சள் பொடி        & ஒரு ஸ்பூன்
புதுப்புளி            & சாத்துக்குடி அளவு
உப்பு                & தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய்        & 100 மிலி
கடுகு                & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு        & ஒரு ஸ்பூன்
கடலைப் பருப்பு        & 2 ஸ்பூன்
பெருங்காயம்        & ஒரு சிட்டிகை
பச்சை நிலக்கடலை    & 4 ஸ்பூன்
(வேர்க்கடலை)
வரமிளகாய்        & 1
வரமிளகாய், மல்லி, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடுபடுத்தி, வாசம் வரும் வரை வறுத்து, சிறிது பெருபெருவென பொடி செய்யவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் சுட வைத்து கடுகு, உளுத்தம் பருபு, கடலைப் பருப்பு, பெருங்காயம், நிலக்கடலை, இரண்டாகக் கிள்ளிய வர மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவந்ததும், புளியை விட்டு கொதிக்க விடவும். 10 நிமிடங்கள் கழித்த திரித்த பொடிகளைச் சேர்த்து, கட்டியில்லாமல், கலக்கி  சிறிது கெட்டியானதும் உப்பு சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும் தருவாயில் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி விடவும்.

வேண்டிய அளவு சாதத்தை எடுத்து ஆற விட்டு ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, புளிக் காய்ச்சலில் சிறிது போட்டுக் கிளறவும்.

Related posts

செட்டிநாடு கோழி குழம்பு

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

nathan

ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

எப்படி சுறா புட்டு செய்வது?

nathan

ருசியான சாக்லேட் கேக் தயார்…

sangika

செட்டிநாடு மசாலா சீயம்

nathan

சுவையான ரவா கேசரி

nathan