31.4 C
Chennai
Tuesday, Jul 8, 2025
014e8262c4f09d28cc45244f215fdd
மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! நீராவி பிடிப்பதால் நுரையீரலில் உள்ள சளியை நீக்க முடியுமா…?

வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என நாம் வெளியில் சென்று வரும் பொழுது அவற்றால் ஏற்படும் நோய்த்தொற்று அவர்களை மிக அதிக அளவில் பாதிக்கும். இதனை போக்க சூடான தண்ணீரில் சில மூலிகைகளை சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும்.
இது மூச்சு குழாய் அடைப்பை சரி செய்து விடும். இரண்டாவதாக நமக்கு மிகவும் தேவையானது நோய் எதிர்ப்பு சக்தி. இது பாலில் அதிக அளவில் உள்ளது. பால் ரத்த சிவப்பணுக்களை மிகவும் ஊக்குவிக்கக் கூடியது.
பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து இதை தொடர்ந்து குடித்து வாருங்கள்.

இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுபோல நெல்லிக்காய். தினமும் ஒரு மூன்று ஸ்பூன் அளவு நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.
ஆவி பிடித்தல் என்பது ஒரு மிக முக்கியமான பல்லாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வரும் ஒரு அற்புதமான மருத்துவக் கலை. இதற்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
அதிலும் இந்த நோய்க்கு மிகச் சிறந்த மருத்துவம் ஆவிபிடித்தல் மட்டுமே. நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.
ஆவி பிடித்துக் கொண்டிருக்கும் போது வியர்வை அதிகளவில் வெளியேறும். ஆவி பிடித்து முடித்த பிறகு ஆவி பிடித்த போர்வையை, வேர்வையை துடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.
யாரையும் தொடக்கூடாது. ஆவிப் பிடித்தால் உடனே அந்த துணிகளை கொதிக்கும் சூடான நீரில் வைத்து துவைத்துப் போட வேண்டும். மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கும் போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ஆனால் ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். ஒருவர் ஆவி பிடித்த துணியில், தண்ணீரில் இன்னொருவர் ஆவி பிடிக்கக்கூடாது. இதனால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Related posts

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதிலே மூட்டு வலி வருவதற்கான காரணம் என்ன?

nathan

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க. : அது இவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்குமா…!

nathan

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?

nathan

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

sangika

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதோ எளிய நிவாரணம்

nathan

எது நல்ல கொழுப்பு? அதை எவ்வாறு அதிகரிப்பது?

nathan

வாய்ப்புண்ணை குணமாக்கலாம்

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan