பழவகை ஃபேஷியல்
எண்ணெய்ப் பசை அதிகமுள்ள முகத்தினருக்கு இவ்வகை ஃபேஷியல் மிகவும் ஏற்றது. முழுக்க முழுக்க இயற்கையான பழங்களின் உதவியுடன் செய்வதால் நல்ல பலனைத் தரும். சாத்துக்குடி பழசரத்துடன் பால் சேர்த்து முகத்தில் தடவி முகம் நன்றாகச் சுத்தப்படுத்தப்படும். பிறகு பாலையும் ஓட்ஸையும் சேர்த்து முகம் நன்றாக தேய்க்கப்படும் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பப்பாளியின் கலவையின் உதவியுடன் மஸாஜ் செய்த பிறகு வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவை முகத்திற்கு ‘பேக்’ காக போடப்படும். பிறகு முகத்தை சுத்தப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க அழகும் பொலிவும் ஆகும்.
உலர்ந்த பழவகை ஃபேஷியல்
இம்முறையில் ஆரஞ்சு பழரசத்துடன் பால் சேர்த்து முகம் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு பாலுடன் வீட் ஜெம் சேர்த்து முகம் தேய்க்கப்படும். பிறகு ஆப்ரிகாட், பாதம், வேர்க்கடலை, வால்நட் ஆகியவற்றைப் பாலில் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்து அதைக் கொண்டு மசாஜ் செய்யப்படும். பிறகு பேரீச்சை, அத்திப்பழம், பிஸ்தா, பதாம் முதலியவற்றை அரைத்து ‘பாக்’காகப் போடப்படும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இம்முறையில் ஃபேஷியல் செய்யப்படுவதால் எண்ணெய்ப் பசை முகத்தில் சேர்க்கப்பட்டு முகம் பளபளப்பாக்கப்படுகிறது. அதோடு சருமத்தை நல்ல முறையில் பாதுகாக்கிறது
மேற்கூறியபடி உள்ள பலவகை ஃபேஷியல்களைச் செய்து கொள்வதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
1. மனம் பெரிதளவில் ஓய்வு பெறுகிறது.
2. நரம்பு மண்டலம் ஒழுங்காக வேலை செய்யும்.
3. முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
4. ‘பிவீரீலீ திக்ஷீமீஹீuமீஸீநீஹ்’ உபயோகிப்பதால் முகத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
5. உலர்ந்த சருமம் சீராகும்.
6. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் நீங்கும்.