36.1 C
Chennai
Wednesday, Jul 30, 2025
eyebrowpain
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா? அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…

பொதுவாக புருவங்களுக்கு கீழே வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களாக இருக்கலாம். ஆனால், சில சமயங்களில் தாங்க முடியாத அளவு வலி ஏற்படக்கூடும். பெரும்பாலானோர், இத்தகைய வலியை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த பரபரப்பான உலகத்தில் கண் வலிக்கு அக்கறை செலுத்தும் நாம், புருவத்தின் வலியை புறக்கணித்து விடுகிறோம்.

புருவத்தை சுற்றிய வலிக்கு கூறப்படும் காரணங்களில் பொதுவானது என்றால், அது க்ளஸ்டர் ஹெட்டேக், அதாவது கொத்து தலைவலி. இது ஐஸ்-பிக் தலைவலி என்று அழைக்கப்படுகிறது. புருவ வலியை பொறுத்தவரை, ஓர் நாளில் பலமுறை ஏற்படக்கூடிய கூர்மையான வலி, வாரங்கள் முதல் மாதங்கள் வரை வலி விட்டுவிட்டு உண்டாகக்கூடும்.

வலி ஏற்படுவது, நிற்பது என ஒரே முறையில் ஏற்படலாம். இதுபோன்று, புருவ வலி ஏற்படுவதற்கு ஏராளமாக காரணங்கள் உள்ளன. அது பற்றி இப்போது விரிவாக தெரிந்து கொள்வோம்…

கொத்து தலைவலி (Cluster Headache)

பெண்களை விட ஆண்களுக்கு தான் க்ளஸ்டர் தலைவலி அதிகமாக ஏற்படக்கூடும். இந்த தலைவலி ஏற்படுவதற்கு கல காரணங்கள் உள்ளன. இருந்தாலும், மருத்துவர்கள் கூறுவதன் அடிப்படையில், இவற்றிற்கு பல காரணங்கள் உள்ளன மற்றும் ஹிஸ்டமைன் மற்றும் செரோடோனின் முறையற்ற கட்டுப்பாடும் ஒரு காரணம் தான். இந்த தலைவலிக்கான தூண்டுதல்கள் என்றால், குடிப்பழக்கம், அதிகப்படியான வெளிச்சம், வேலைப்பளு, வெப்பம், புகைப்பிடித்தல் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவாக கூட இருக்கலாம். இந்த வலி சிறிது சிறிதாக தொடர்ந்து, நாள்பட்ட மற்றும் தீவிர வலியாக கூட மாறலாம். வலிக்கான காரணத்தை புரிந்துகொள்வதே அதற்கான சிறந்த சிகிச்சைக்கு வழிவகுக்கும். அதனுடன், தினசரி சிறிது நேரம் புருவத்தை சுற்றி மசாஜ் செய்து வாருங்கள்.2 tensionheadach

பதற்ற தலைவலி

பதற்றத்தினால் வரக்கூடிய தலைவலியானது, பெரும்பாலும் கண்களை சுற்றி வலி ஏற்படுத்தி, ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். பதற்ற தலைவலிக்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த வகை வலியில் பொதுவான வலி என்றால், தூக்கமின்மை மற்றும் காய்ச்சல் அல்லது சளி தொடங்குவது போன்றவை, அதை தூண்டுகிறது. அத்தகைய வலி காரணமாகவும், மன அழுத்தத்தின் காரணமாகவும் தலை பாரமாக உணரக்கூடும். பின்னர் கண் இமைகளில் ஏதோ கனமாக இருக்கும். இதற்குப் பிறகு, நீங்கள் புருவத்தின் கீழ் கடுமையான வலியை உணரலாம். இந்த வலியைப் போக்க உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.

கண் தொற்று

கண்ணிலோ அல்லது கண்களை சுற்றியோ நோய்தொற்று ஏதேனும் ஏற்பட்டால், அது புருவங்களுக்கு கீழே தான் வலியை ஏற்படுத்தும். சில சமயங்களில், சைனஸ், எலும்புகளில், துவாரங்களில் மற்றும் கண்களை சுற்றிலும் பரவக்கூடிய நோய்தோற்றுகளால் கடுமையாக வலி புருங்களில் ஏற்படக்கூடும். எனவே, இது போன்ற தருணங்களில் கண்களையும், அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதுமட்டுமின்றி. நோய்த்தொற்றுகளைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதும் முக்கியம். முடி மற்றும் தலையில் நோய்தொற்றின் தாக்குதல் இருந்தால் கூட புருங்களில் தான் வலி ஏற்படுமாம். எனவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆற போடாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால், வலி நீடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துவிடும்.

க்ளோகோமா (Glaucoma)

க்ளோகோமா என்பது கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, புருவங்களுக்கு கீழே வலியை ஏற்படுத்தக்கூடியது. இந்த வலி தொடரும் பட்சத்தில், கண்களில் அழுத்தம் அதிகமாகி, பார்வை நரம்பு அழிய நேரிடும். இதனால், பாதிக்கப்பட்ட நபர் கண் பார்வையை இழந்துவிடுவர். க்ளோகோமா ஏற்படுதற்கான முக்கிய காரணம் தெரியவில்லை. ஓபன் ஆங்கிள் க்ளோகோமா மற்றும் ஆங்கிள் க்ளோசர் க்ளோகோமா, கண்களில் திரவ ஓட்டத்தை தடுத்து நிறுத்திவிடும். முடிவில், கண்களில் கொடுக்கப்படும் அழுத்தமானது அதிகரித்து விடும். இதனால், புருங்களுக்கு கீழே தொடர்ச்சியாக பல முறை வலி ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு, வலி ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகுவதே சிறந்த தீர்வாகும்.eyebrowpain

தற்காலிக தமனி அழற்சி

புருவங்கள் அல்லது கண் இமைகள் அல்லது புருங்கள் இருக்கும் பகுதியில் ஒருவித அசைவு போன்ற அந்த இடத்தில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். பொதுவாக, இவை சில நாட்களுக்கு தோன்றிவிட்டு, பின்பு மறைந்துவிடும். இந்த பிரச்சனைக்கான முக்கிய காரணம், தூக்கமின்மையும், ஒழுங்கற்ற தூங்கும் முறையும் தான். கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ மற்றும் கண் நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலோ கூட புருவங்களுக்கு கீழ் பகுதியில் வலி உண்டாகும். ஏனென்றால், தலையில் இருந்து கண் நோக்கி ஓடும் தற்காலிக தமனி வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க… வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

60 வயதைத் தாண்டிய குழந்தைகளை எப்படி குஷிப்படுத்துவது?

nathan

இப்போது இளம் பெண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்!

nathan

குழந்தையின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்

nathan

உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

nathan

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ?

nathan

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan

மனித உடலில் தேவையின்றி இருக்கும் பயனற்ற உடல் பாகங்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க…

nathan