27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மருத்துவ குறிப்பு

கருத்தரிப்பதை பாதிக்கும் மனஅழுத்தம்

கருத்தரிப்பதை பாதிக்கும் மனஅழுத்தம்
சினைப்பையைத் தாக்கும் பிரச்சனைகளுள் முக்கியமானது சினைப்பைக் கட்டிகளாகும் (பாலிசிஸ்டிக் ஓவரிஸ்). குழந்தைப்பேறு இல்லாமலிருக்கும் பெண்களில் அதிகம் காணப்படுவது இதுவே. சினைப்பைகள் கருமுட்டை உற்பத்தியாகும் இடமாகும்.இவற்றில் ஏற்படும் கட்டிகளால் மாதம் ஒரு முறை வெளிப்படும் கருமுட்டை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கருத்தரித்தல் தடைபடுகிறது. “மன அழுத்தம்” தற்போதைய சூழலில் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது, பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெண்கள் அன்றாட வீட்டுப் பணிகளையும் பார்த்து வேலைக்கும் செல்ல வேண்டி இருப்பதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.மன அழுத்தம் உடலில் அனைத்து உறுப்புகளையும் பாதிப்பதோடு முக்கியமாக இனப்பெருக்கத்திற்கு தேவையான உடலியல் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கிறது. தொடர்ச்சியான நீண்ட கால மன அழுத்தம் கருமுட்டை வெளியாவதைத் தடுத்து மாதவிடாயையும் தடுக்கிறது. எம்மாதிரியான மூலிகைகள் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது என்பதைத் தெரிந்து கொள்வது சிறப்பானது.

நம்மிடையே நெடுங்காலமாக பழக்கத்தில் உள்ள அசோகு, வெந்தயம், இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய், காட்டாத்திப்பூ, நன்னாரி, ஆல், அரசு போன்றவை பெண்களுக்கான நோய்களுக்கு அருமருந்தாக அமைந்துள்ளன. அசோக மரத்தின் பட்டை, பூ ஆகியவை பெண்களுக்கான சிகிச்சையில் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போதைய ஆராய்ச்சிகளில் இருந்து இது கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், மாதவிடாயின் போது ஏற்படும் வலி ஆகியவற்றிற்கு தீர்வாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர்விட்டான் போன்றவை இனப்பெருக்க நோய்களுக்கு மட்டுமல்லாது மாதவிடாய் நிற்கும் காலங்களில் (மெனோபாஸ்) ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகின்றன.

Related posts

நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வெட்டிவேரின் மகத்துவம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க சூப்பர் டிப்ஸ்

nathan

Male Drinking – What’s the difference between female drinking?|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…

nathan

முதலிரவை பாலுடன் தொடங்க காரணம் தெரியுமா?

nathan

தலைவலியை குணப்படுத்தும் கறிவேப்பிலை

nathan

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

nathan

மாரடைப்பு ஏற்படும் அச்சமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கால் ஆணி குணமாக பாட்டி வைத்தியம்

nathan