27.1 C
Chennai
Saturday, May 24, 2025
image
மருத்துவ குறிப்பு

சு கர் ஃப் ரீ மா த்திரைகளை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளே! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

குளுகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யாது என்பதற்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகளை நீரிழிவு நோயாளிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் நன்மையை விட தீமைகளே அதிகம் நடைபெறுகின்றது. இது பசியை தூண்டு, உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சுகர் ஃப்ரீ மாத்திரைகளை வைத்து ஆராச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இதனை சோதனை எலிகளுக்கும், பறக்கும் பூச்சிகளுக்கும் கொடுத்துள்னர். இதில் சுகர் ஃப்ரீ மாத்திரைகளிலுள்ள செயற்கை தயாரிப்பான சுக்ரலோஸ் என்ற இனிப்பு, எலிகளுக்கு பசியை அதிகம் தூண்டியிருக்கிறது.

 

இதனால் இவைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக உணவை உட்கொண்டிருக்கின்றன. கலோரி அளவினை கூட்டும் சர்க்கரையின் அளவு குறைவதால் , சக்தி குறைகிறது. இதனால் தனிச்சையாக மூளை சக்தி கிடைப்பதற்காக அதிக உணவை உண்ணச் சொல்லி பசியை தூண்டுகிறது என்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இனிப்பிற்கும் சக்திக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் இந்தசுகர் ஃப்ரீ மாத்திரைகள் இந்த இரண்டிலும் சம நிலை செய்யத் தவறுவதால்தான் , கலோரி அளவை மூளையானது அதிகரிக்கச் செய்கிறது.image

பறக்கும் பூச்சிகளுக்கும் அந்த வகையில் இந்த செயற்கை இனிப்புகளை கலந்து 5 நாட்களுக்கு உண்ண கொடுக்கப்பட்டது. பின் இயற்கையான இனிப்பு வகைகளை உண்ண அளிக்கும்போது, அவை வழக்கத்திற்கு மாறாக 30 % அதிகமான கலோரி கொண்ட உணவுகளை உண்டதாக ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் எலிகளுக்கும் இதே முறையில் செயற்கை 7 நாட்களுக்கு கொடுத்தார்கள். பறக்கும் பூச்சிகளைப் போலவே இவைகளும் மிக அதிகமாக உணவுகளை உன்ண ஆரம்பித்தது.

 

மேலும் இந்த ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், செயற்கையான இனிப்புகளை எடுத்துக் கொள்வதால், இன்சோம்னியா என்ற தூக்கமின்மை வியாதி ஏற்பட வாய்ப்புண்டு மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டியை தூண்டும். இதனால் போதிய சக்தி குறைந்து பலவீனம் ஏற்படும். இது சக்கரை நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும்.

எனவே சக்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின் பின்னர் எடுத்து கொள்ளவும்.

Related posts

மலம் முழுவதுமாக வெளியேற

nathan

கழுத்துவலி மூட்டுவலி தீர இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வாருங்கள்…..

sangika

இந்தியாவில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் இல்லை – திடுக் அறிக்கை!

nathan

கண்டிப்பாக வாசியுங்க குழந்தை பருவத்திலேயே புற்றுநோய் அபாயத்தை எப்படி தடுப்பது?

nathan

இந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்… தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் மூன்றாவது பருவ காலத்தில் நிகழும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

nathan

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!அப்ப இத படிங்க!

nathan

blood allergy symptoms in tamil – ரத்த அல்லெர்ஜி

nathan

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா?

nathan