திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது நமது முன்னோர்களின் கூற்று, அந்த திருமண வாழ்வு செழிப்பாக இருப்பதும் வெற்றிகரமாக அமைவதும் பெரும்பாலும் இந்திய திருமணங்களில் தான் என கூறப்படுகிறது. இந்திய திருமணங்கள் வெற்றிகரமாக அமைய பற்பல காரணங்கள் உள்ளது.
* இந்தியாவில் பெரும்பாலும் குடும்பத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே நடைபெற்று வருவதால் அயல்நாடுகளை போல் விவாகரத்து அதிகம் இல்லை.
* இரண்டு குடும்பங்கள் இணைந்து திருமணத்தை நடத்தி வைப்பதால், தம்பதியினர் சம்மந்தப்பட்ட சின்ன சின்ன விடயங்களிலும் அவர்களது பெற்றோர் ஆலோசனை கூறுவர். இதனால் திருமண வாழ்க்கை செழிக்கும்.
* இந்திய திருமணங்களில், ஆண்களை விட பெண்களே அதிகளவில் சமரசமடைவார்கள். ஏனெனில் ஆணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள திருமணத்திற்கு முன் அவளே தான் வாழ்க்கையை எடுத்து வைக்கிறாள்.
* மத்தியிலான நிரந்தரமான ஒப்பந்தம் இது – எழுதி முத்திரை குத்தப்படுவதால் நிரந்தரமாக இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் கூட திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைகிறது என்று சொல்லலாம்.
* வாழ்வில் எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் சாகும் வரை சேர்ந்திருப்போம் என்ற உறுதியை தம்பதிகள் ஏற்றுக்கொள்கின்றனர்.
* குழந்தைகளின் நலன் கருதி, அவர்களின் வாழ்க்கை சிதறிவிடக்கூடாது என்பதற்காக பெரும்பாலனோர் சேர்ந்து வாழ்கின்றனர். இதனால் விவாகரத்து தவிர்க்கப்படுகிறது.
* ஆண்களின் ஈகோ மற்றும் கோபத்தை பெண்கள் பொறுத்து கொண்டு மரியாதை தருவதால் திருமண வாழ்வு இனிக்கிறது. இந்த காரணங்களை பலர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமே சிறந்து விளங்கும் என்பது உண்மை.